Tuesday, April 22, 2008

உலகைச்சுற்றி . . . அமெரிக்கப் படைக்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு

அமெரிக்கக் கப்பற்படையினரின் (ருளு ஆயசiநே) பாதுகாப்பு என்ற போர்வையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் அருவருக் கத்தக்கவை. ஜப்பான், தென்கொரியா, பிலிப் பைன்ஸ் என எந்த நாடுகளுக்குச் சென்றாலும் அங்கெல்லாம் அந்த படையினரை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடை பெறுகின்றன.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை களில் அமெரிக்க வீரர்கள் ஈடுபடுவது வெட்ககரமானது. குற்றம் புரிபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கூட அந்த நாடு களுக்கு உரிமையில்லை என்பது அதை விட கொடுமை யானது.

குற்றவாளிகளை விசாரித்து தண்டனை வழங்கிட அமெரிக்க நீதிமன்றங்களுக்கு மட்டுமே உரிமை உண்டாம். அமெரிக்கப் படைகளை அனுப்ப இது முன் நிபந்தனையாக வும் போடப்படுகிறது.

1995ம் ஆண்டில் ஜப்பான் நாட்டில் 12 வயது பெண்ணை அமெரிக்க படைகள் கூட்டாக பாலியல் பலாத்காரத்திற்கு உள் ளாக்கியது. அதற்கு எதிராக கண்டனக் குரல்கள் உலகெங்கும் எழுந்தன. ஆனால் அமெரிக்கா எவ்வித நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை.

இவ் வருடத்தில் பிப்ரவரி மாதத்தில் ஒக்கி னாவோ மாநிலத்தில் 14 வயது பெண் அமெரிக்க கப்பல் படை யினரால் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி யளிக்கக் கூடியது.

ஜப்பானிய காவல்துறை அந்தக் கயவனை கைது செய்துள்ளது.ஜப்பான் - அமெரிக்க ராணுவ ஒத்து ழைப்பு சமீப காலமாக விரிவடைந்து வருவ தால் ஜப்பானிய மண்ணில் அமெரிக்க படை யினரின் பாலியல் அத்துமீறல்களும், அராஜ கங்களும் அதிகரிக்கவே செய்யும்.

அவர்கள் முகாமிட்டுள்ள பகுதிகளில் மக்கள் நிரந்தர அச்சத்திலும், கவலையுடனும் தான் வாழ வேண்டியுள்ளது.

இதனை மனதில் கொண்டுதான் ஜப்பான் நாட்டு இடது சாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பிற ஜனநாயக சக்திகள் அமெரிக்கப் படைகளை ஜப்பானிய மண்ணை விட்டே நிரந்தர மாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.

ஒக்கினாவோ சம்பவத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜப்பானின் தேசிய தொழிற் சங்கங்களின் மகா சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியா உட்பட உலகம் முழு வதும் உள்ள நாடுகளின் தொழிற் சங்கங்கள் இதற்கு ஆதரவாய் குரல் எழுப்பியுள்ளன.

Thanks : தீக்கதிர்

No comments: