Sunday, March 30, 2008

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

""உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்'', என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது.

குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி;

தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி;

யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

"எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி' என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது.

"தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்' என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் "இதுவே நியாயம்' என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். "வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்' என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், "அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை' என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை "வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்' அவர்கள் கொக்கரிக்கிறார்கள்.

அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு "கோணலான கல்வி' தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது."திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி'யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை.

ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. "மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை' என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், "தர்மம்' என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும்.

சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் "தான் உயர்ந்தவன்' எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு "தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்' என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும்.

இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது.

இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி.

வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், "பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு' என்பதற்குப் பதிலாக, "யுத்த தர்மம்' என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது.

குஜராத்தில் நடந்தது யுத்தமா?"எதிரிகள் மனிதர்களேயல்ல' என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. "தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்', என்பதை மறந்து, "தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள்.

இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் "ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே' என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் "கொலைவெறி'யாகவும் மாறிவிட்டது.

போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான்.எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு "தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி' எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும்.

இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும்.

போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் "கூட்டத்துக்குத் தலைவன்' கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது "ராஜநீதி' என்றும் கூட ஏற்கப்படும்.

இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது?வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; "ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே' எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான "குயுக்தி'. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். "தன்னலக் குறிக்கோள்' மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், "வெறியாடும் வாய்ப்பி'லேயே விடுதலையின் திருப்தியை அடையும்.

ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.தனி மனிதனுக்கு "தன் வீடு, தன் இடம்' எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் "தன் இடம்' என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும்.இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, "யுத்தம்' எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் "கொல்லப்படுமுன் கொல்' எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும்.

குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, "கூட்டம்' ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.கோழைகள் பயந்தவர்கள். "தண்டனையைத் தவிர்ப்பதே!' அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.

குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் "வீரர்களின் சேனை'யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் "போர்' என்றும், அரசு பலத்தை "வீரமெ'ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் "தொற்று நோய்' போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.·

ருத்ரன், மனநல மருத்துவர்.

நன்றி : தமிழரங்கம்

Thursday, March 27, 2008

பாஜக அரசின் விபரீத முயற்சி!

தமிழகத்தின் முந்தைய ஜெயலலிதா அரசு, மத மாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. நாடா ளுமன்றத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து அந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது.

தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ராஜஸ்தான் மாநில பாஜக அரசு ‘மதச் சுதந்திர சட்ட மசோதா -2008’ என்ற பெயரில் மதமாற்ற தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர முயல்கிறது.

ஏற்கெனவே இத்தகைய ஒரு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி அப்போது மாநில ஆளுநராக இருந்த பிரதிபா பாட்டீலின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. அவர் அந்த சட்டத்தை திருப்பி அனுப்பிவிட்டார்.

ஆனால், அதே சட்டத்தை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். அவர் அப்போதைய குடி யரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பார் வைக்கு அனுப்பினார். அவர் கடைசி வரை இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், கொடூரமான விதிகளுடன் கூடிய இந்தச் சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வசுந்தரா ராஜே அரசு முயல்கிறது. மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி எந்தவொரு அறக்கட்டளை அல் லது நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. மேலும்...

யாராவது ஒருவர் மதம்மாற விரும்பினால் முப்பது நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று கூறும் இந்த சட்டம், மறு மதமாற்றத்திற்கு இது தேவையில்லை என்று கூறுகிறது.

அதாவது, ஒருவர் இந்து மதத்திலிருந்து மாற விரும்பினால் நோட்டீஸ் அளிக்க வேண்டும். ஆனால், ஏற் கெனவே மதம் மாறிய ஒருவர் மீண்டும் இந்து மதத் தில் சேர விரும்பினால், நோட்டீஸ் எதுவும் அளிக்க தேவையில்லை என்று இந்த மசோதா கூறுகிறது.

இதிலிருந்தே சிறுபான்மை மக்களை ஒடுக்கி அச்சுறுத்துவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது என்பது தெளிவு.

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 25(1) இந்திய மக்களின் மதச்சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இந்திய குடி மகன் யாரும் தான் விரும்பும் மதத்தை பின்பற்ற வும், அதை பிரச்சாரம் செய்யவும் உரிமை உண்டு என்று கூறுகிறது. ஆனால், ஒருவர் மதப் பிரச் சாரம் செய்தாலே அதை மதமாற்றத்திற்கான பிரச் சாரமாக எடுத்துக் கொண்டு அவரை சிறையில் தள்ள ராஜஸ்தான் மாநில பாஜக அரசு முயல்கிறது.

இந்தியாவில் மதமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள், இந்து மதத்தில் உள்ள கொடூரமான ஜாதிய அடுக்குகளும், கொடுமை களும், தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட அநீதி களும்தான் மதமாற்றத்திற்கு மிக முக்கிய கார ணமாக இருந்து வந்துள்ளது என்று கூறுகின்றனர்.இந்து மதத்திற்குள் நீடித்துக் கொண்டே தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் போராடிய டாக்டர் அம்பேத்கார் கடைசியில் இந்தக் கட்டமைப் பிற்குள் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்று கூறி புத்த மதத்தில் பல்லாயிரக்கணக்கான மக்க ளோடு சென்று சேர்ந்தார்.

மத மாற்றங்களால் மட்டும் தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள் ஒழிந்துவிடுமா என்ற கேள்வி இப்போதும் நீடிக் கிறது. அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு தேவாலயத்தில் இழைக் கப்பட்ட அநீதி இதற்கு ஒரு சான்றாகும். எனினும், நீண்ட காலமாக ஜாதிய வெப்பத்திற்குள் தவிக்கும் மக்களுக்கு மதமாற்றம் என்பது ஒரு தற்காலிக நிவாரணமாக உள்ளது என்பதை மறுப்பதற் கில்லை.

தீண்டாமைக் கொடுமை முற்றாக ஒழிய வேண்டுமானால் அடித்தட்டில் உள்ள அந்த மக்களுக்கு நிலமும், ஜனநாயகப்பூர்வ அதிகார மும் சென்று சேர வேண்டும்.ஆனால், இந்து மதத்தில் உள்ள ஜாதியக் கொடு மையை ஒழிக்க எந்தவொரு முயற்சியும் எடுக்காத பாஜக பரிவாரம், இன்னும் சொல்லப்போனால், சாஸ்திரம் என்ற பெயரில் இதை நியாயப்படுத்துகிற இந்தக் கூட்டம் இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க முயலும் மக்களை கட்டிப்போடவே மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வருகிறது.

தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை மதரீதியாக, இனரீதியாக, பிராந்திய ரீதியாக பிரித்துக் கூறுபோட மதவெறிக் கூட்டம் தயங்குவதில்லை. மும் பையில் ராஜ்தாக்கரே, பிற மாநில மக்களுக் கெதிராக விஷம் கக்குகிறார். கர்நாடகா மாநில பாஜக தலைவர் எடியூரப்பா ஒகேனக்கலுக்கு ஓடி வந்து ஆட்டம் போடுகிறார். இப்போது ராஜஸ்தான் மாநில பாஜக அரசு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து மீண்டும் அதிகாரத்தைப் பிடிக்க முயல்கிறது.அரசு ஏற்றுக் கொண்டபடி தண்ணீர் வழங்கக் கேட்டு போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்றது வசுந்தராராஜே ஆட்சி. இந்த அரசின் மீது ராஜஸ் தான் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதை திசை திருப்புவதற்காகவே மதவெறியை தூண்டும் முயற்சியில் அந்த அரசு ஈடுபடுகிறது.ஜனாதிபதியின் பரிசீலனையில் உள்ள ஒரு மசோதாவை வேறுவடிவில் நிறைவேற்றுவது என்பது ஜனநாயக மரபுகளுக்கே எதிரானது.

ஜன நாயகத்தை துளியும் மதிக்காத இந்த மதவெறிக் கூட்டத்திடம் அந்தப் பண்பை எதிர்பார்க்க முடியுமா?

Monday, March 17, 2008

பாஜகவில் பயங்கர கோஷ்டி மோதல்- அடிதடியில் 2 பேர் படுகாயம்

கோவை: பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன கோஷ்டிக்கும், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோஷ்டிக்கும் இடையே கோவையில் பயங்கர அடிதடி நடந்தது.

இதில் இரு தொண்டர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியில் நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் இந்த சண்டை நடந்துள்ளது.

முன்னதாக கணேசனை ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு பேராட்டம் நடத்திய சம்பவமும் நடந்தது.சமீபத்தில் கோவை கிழக்கு மண்டல பாஜக தலைவராக இருந்த ராஜன், குனியமுத்தூர் மண்டல தலைவர் ராமமூர்த்தி, தொண்டாமுத்தூர் மண்டல தலைவர் மணிவண்ணன் ஆகியோர் பதவி நீக்கப்பட்டனர்.

நீக்கப்பட்டவர்கள் அனைவரும் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் ஆவர்.

இவர்களுக்கு பதிலாக புதிதாக நியமனம் ஆனவர்கள் இல.கணேசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் இல.கணேசன் கோவை வந்தார். அவரை சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் நகரத் தலைவர் சவுந்தர்ராஜன், ராஜன் உள்ளிட்டோர் முற்றுகையிட்டதோடு அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

கட்சியினர் முன்னாள் மாநிலத் தலைவரே இப்போதைய தலைவரை முற்றுகையிட்டு கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடிதடி:

இதை சற்றும் எதிர்பாராத கணேசன், ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பி தனக்கு புக் செய்யப்பட்ட ஹோட்டல் அறைக்குச் சென்றார்.அவரை சி.பி.ராதாகிருஷ்ணனும், அவரது ஆதரவாளர்களும் பின் தொடர்ந்து சென்றனர்.

இல.கணேசனின் அறைக்குள் ஆவேசமாகப் புகுந்தனர். அங்கு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும், இல.கணேசனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.அதே போல இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது.

இந் நிலையில் இரு தரப்பும் ஒருவரை ஒரு அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இந்த அடிதடியில் தர்மராஜ், ராஜன் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது.காது கிழிந்து, மூக்கு உடைந்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சண்டை குறித்து கேள்விப்பட்ட போலீசார் அங்கு விரையவே, பாஜகவினர் தங்களுக்குள்ளாகவே சமாதானமாகி கலைந்து சென்றனர்.

Thanks: Thatstamil

மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள் போதும்: மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு


புதுடில்லி:


"மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.


கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து, இதை கண்டுபிடித்துள்ளனர்.


அவர்கள் கூறியிருப்பதாவது:


மஞ்சளில்,மஞ்சள் நிறத்தை தருவது, அதில் உள்ள,"கர்குமின்' (விதையில் உள்ள ரசாயன பொருள்) எனப்படும் ஒரு கலவை. அதில் ரசாயன சத்து உள்ளது. உணவில் சேர்த்து சாப்பிடும் போது,


மஞ்சளில் உள்ள சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது;


புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது;


ரத்தக்குழாய்களில் அடைப்பு வராமல் தடுக்கிறது;


பாக்டீரியா தாக்குதலை முறியடிக்கிறது.


மஞ்சளில் உள்ள "கர்குமின்' ரசாயனம், உடலில் உள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது.


இதயத்தில் ரத்தக்குழாய் சுருங்குவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக அளவில் புரோட்டீன் உற்பத்தியாவது தான் காரணம். அதை இந்த ரசாயனம் தடுக்கிறது.


"ஜீன்'களில் உள்ள குரோமோசோம்களில் கோளாறு இருந்தால் தான், இதய வால்வுகள் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கேயே அந்த கோளாறுகளை,மஞ்சள் சத்து தடுத்துவிடுகிறது.


எங்களின் முதல் கட்ட சோதனையில், எலிகளுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம்.


ஆனால்,மஞ்சளை அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது.


எந்த அளவு வரை பயன்படுத்தலாம் என்பதை இப்போது ஆராய்ந்து வருகிறோம்.


இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.


கனடா நிபுணர்களுக்கு முன்பே, மைசூரில் உள்ள, மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள், மஞ்சள் மகிமை பற்றி ஆராய்ந்து, இதே உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர்.


அவர்கள் கூறுகையில்,


"கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மஞ்சள் பயன்படுகிறது;


இதை நாங்கள் ஏற்கனவே சோதனை செய்துவிட்டோம்.


மஞ்சள் சேர்ந்த உணவை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள அடர்த்தி குறைந்த கொலஸ்ட்ரால் அளவு குறைந்து விட்டது தெரியவந்தது'


என்று தெரிவித்தனர்.

அதிமுக இளைஞர் பாசறைகளில் சேர ஆளில்லை!

கரூர்: கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட அதிமுக இளைஞர் பாசறையில் சேர போதிய எண்ணிக்கையில் இளைஞர்கள், இளைஞிகள் முன் வரவில்லை.

இதையடுத்து அக் கட்சியின் இளைஞரணி, மகளிரணியி்ல் உள்ளவர்களையே மீண்டும் பாசறைகளில் உறுப்பினர்களாக சேர்த்து கட்சியில் புதிதாக ஆட்கள் சேர்ந்தது போல நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விஜய்காந்த் கட்சியில் ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து வருவதையடுத்து உதறல் எடுத்த திமுக எப்போதுமில்லா அதிசயமாக இளைஞரணி மாநாட்டை நடத்தியது.

அதிமுகவும் போட்டி போட்டிக் கொண்டு தமிழகம் முழுவதும் இளைஞர் பாசறைகளையும் இளம் பெண்கள் பாசறைகளையும் தொடங்குவதாக அறிவித்தது.

இதுவரை எந்தக் கட்சிகளிலும் சேராத பதினெட்டு வயதிலிருந்து இருபந்தைந்து வயதுக்குட்பட்டவர்களை இதில் சேர்த்து அதிமுகவை பலப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 7ம் தேதி முதல் பாசறைகள் தொடங்கப்பட்டன.

ஆனால், கரூர் மாவட்டத்தில் இந்த அதிமுக பாசறைகளில் சேர போதிய இளைஞர்கள் இளம் பெண்கள் முன் வரவில்லை.இதையடுத்து ஏற்கனவே அதிமுக இளைஞரணி, மற்றும் மகளிர் அணியில் உள்ளவர்களை மீண்டும் பாசறைகளில் சேர்த்து புதிதாக கட்சியில் சேர்ந்தவர்கள் போல கணக்கு காட்டியுள்ளனர் அம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.

இது தொடர்பான விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செம்மலையிடம் சில சீரியசான அதிமுக தொண்டர்கள் இது பற்றி புகார் கூறினர்.

ஆனால், நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டு இப்போது தான் கட்சியில் சாப விமோச்சனம் பெற்றுள்ள செம்மலை, நமக்கு ஏன் வம்பு என்று சைலண்ட்டாகிவிட்டார்.

இதையடுத்து சில நிர்வாகிகள் தலைமைக்கு புகார் கணைகளை பறக்க விட்டுள்ளனராம்.

கரூரில் மட்டுமல்ல தமிழகத்தின் பல பகுதிகளிலுமே இந்த 'ஜோக்' நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

Sunday, March 16, 2008

சத்தியத்தை அணைக்கவே முடியாது

இவ்வுலகத்தில் மனிதசமூகத்திற்கு நேர்வழிகாட்ட எண்ணற்ற மதங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாத்தங்கள் தோன்றின. அவற்றில் பல்வேறு வந்த வழியிலேயே சென்றுவிட்டன சில கொள்கைகள் நிலைத்து நிற்கின்றன அவற்றிலும் தூய இஸ்லாம் மட்டுமே இவ்வுலகம் அழியும் வரை நிலைத்து நின்று நேர்வழி காட்டி வெற்றிபெறும்.

அவன் தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (சூரா அத்தவ்பா : 33)

இப்படியிருக்கையில் இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியை கண்டுகொள்ள முடியாமல் மாற்றார்கள் ஊடகங்களில் வாயிலாக முக்கியமாக இணையதளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் இவ்வுலகத்திற்கு நேர்வழிகாட்ட வந்த இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் மீது கலங்கத்தை ஏற்படுத்தியும் வருகிறார்கள்.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் சில தவறான எண்ணங்களுடனும் யூகத்தின் அடிப்படையிலும் எடுத்துவைக்கப்படுகிறது. அவர்களுக்கு சத்தியத்தை புரிய வைக்கவும் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே மிகைத்து நின்று வெற்றிவாகை சூடும் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆகவே இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் சத்தியவழிக்கு என்றைக்குமே முட்டுகட்டை போடமுடியாது என்பதை எல்லாம் வல்ல இறைவன் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.(அல்குர்ஆன் 53:28)

ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 10:36)

வேதக்காரர்களான யூதர்களும் கிரிஸ்தவர்களும் உண்மை மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று தெரிந்த பின்னரும் வறட்டு கௌரவத்தால் சத்தியத்தை நிராகரித்து இறைவேதத்தை இருட்டடிப்பு செய்தும், நவிமொழிகளை நாசவேளை செய்தும் உண்மைக்கு மாற்றமான செய்திகளை பரப்பிவருகிறார்கள்.

அல்குர்ஆனில் சில வசனங்களை மாற்றியமைத்து தனக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குகிறார்கள். இதுபோதுமல்லாது பல இணையதளங்களை நிறுவி அதன்மூலம் காபாவில் சிலைவணங்குதல், நபிகளார்(ஸல்) அவர்களின் குடும்பத்தை பழித்து வர்ணித்தல், காட்டுமிரான்டி மார்க்கம் என்பனபோன்ற எண்ணற்றக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற வகையில் உண்மை எதுவென்று தெரிந்த பின்னரும் அவதூராக பரப்பிவருகிறார்கள். இதை இறைவன் அவர்களின் முகத்திறையை இவ்வாறு கிழிக்கிறான்,

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:71)

இப்படி பல ஆக்கங்களை நிறுவி முஸ்லிம்களின் உள்ளங்களில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி தவறான வழிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அந்த கோர முகங்களின் நஞ்சு எண்ணமாகும்.

இவ்வாறு இணையதளத்தில் நிறுவப்பட்ட ஆக்கங்கள் புதிதாக இஸ்லாத்தை அறியவேண்டும் என்பதற்காக ஒருவர் விரும்பி தேடும்போது இதை பார்ப்பாரேயானால் விரண்டோடக்கூடிய ஒரு துர்பாக்கிய சூழ்நிலைதான் அங்கு உருவாகும். ஆகவே இப்படிப்பட்ட பல சூழ்ச்சிகளின் மூலம் இஸ்லாத்தின் எழுச்சியை அமுக்க நாடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை தங்களது விழிகளை உளியை கொண்டு குத்திக்கொண்டு இருக்கிறோம் என்று. இறைவன் அந்த வேதக்காரர்களின் கூறுகெட்டச் செயலை இவ்வாறு விவரிக்கிறான்.

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும் (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை. (அல்குர்ஆன் 3:69)

இன்னொரு பக்கம் இணைவைப்பாளர்கள் நடத்துகின்ற தவறான பிரச்சாரங்கள், முஸ்லிம்களின்மீது கட்டவிழ்த்துவிடுகின்ற மனித இனப்படுகொலைகள், சமூகத்தையே தறமட்டமாக்கும் கற்பழிப்புகள், குழந்தையை வயிற்றியிலிருந்து கீறியெடுத்து கொலைசெய்கின்ற அக்கிரமங்கள், குண்டுமழை பொழிவுகளின் மூலம் நாட்டையே சுடுகாடாக்கும் கொடூரம், சத்தியவாதிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து சர்வதேச அளவில் இறைமறையோடு வாழ்பவர்களை சிறையோடு கொல்லும் அவலம், பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் பர்தாவை ஆனாதிக்கம் என்று கூப்பாடு போடும் கோழைத்தனம், முஸ்லிம்கள் முன்னேறக்கூடாது என்பதற்காக இடஒதுக்கீடை எதிர்க்கும் இறக்கமற்றச் செயல், மறையோதுவதற்காக கட்டப்பட்ட இறையில்லங்களை இடித்திடும் இழிநிலை, இஸ்லாமின் வளர்ச்சியை பார்த்து நடுங்கும் வஞ்சகம், வாய்மையால் பரப்பப்பட்ட மார்க்கத்தை வாளால் வளர்க்கப்பட்டது என்று வாதிடும் பேதிகள், சத்தியத்தில் அசத்தியத்தை கலக்கும் கடும்போக்கு, அறப்போரை அறியாமல் விளக்கம் கொடுக்கும் அறிவிழித்தனம், உண்மைவாதிகளை பழமைவாதிகளாக சித்தரிக்கும் பாசிசத்தன்மை, இறைச்சட்டங்களை ஊனச்சட்டங்களாக ஊதும் ஊடகங்கள், நாகரிகம் என்ற பெயரில் அநாகரிகத்தை விதைக்கும் அரக்கத்தனம், இறைவேதத்தை குறைகூறும் முறையற்ற போக்கு, இறைதூதரை கறைகொண்டு பூசும் கொடுமை, இப்படி பல செய்கையின் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தடைபோட எண்ணுகிறார்கள் ஆனால் உண்மையில் இன்று உலகத்தில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிதர்சனாமாக நிருபித்துவருகிறது.

சர்வதேச அளவில் இஸ்லாம் மக்கள் உள்ளத்தில் எந்தளவு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலகின் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இஸ்லாம் பற்றிய செய்திகளே, இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும்.

உலக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பி இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது எனலாம். இதற்கு சான்று பகர்க்கும் முகமாக சில முக்கியமான நபர்கள், பத்தரிக்கைகள் கூறும் கூற்றை இங்கு பார்ப்போம்.

இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது, இது நம்முடைய பல்வேறு மக்களின் வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் நிலைப்பாட்டுக்கும் காரணமாக அமைந்துள்ளது. (அமெரிக்க அதிபர் கிளின்டனின் மனைவி ஹில்லாரி கிளின்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி, மே 31,1996. பக்.3)

இன்று உலகில் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற குழுவாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.(மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக்க குறிப்பு, USA Today பத்திரிக்கைக் குறிப்பு, பிப்ரவரி 17,1989 பக் 4A)

இஸ்லாம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற மதமாக இருக்கின்றது. (ஜெரால்டின் பாம், நியூஸ் டே பத்திரிக்கையின் மதம் பற்றிய எழுத்தாளர், மார்ச் 07, 1989 பக். 4).

இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது. (ஆரி டு. கோல்டுமேன், நியூயார்க் டைம்ஸ் பிப்ரவரி 21,1989 பக்1 ).

மார்சியா. கே.ஹெர்மான்சென் சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் சமயத்துறை பேராசிரியர். அவர் இப்புதிய நூற்றாண்டுத் துவக்கத்தின் பல்வேறு வழிகளில் இளைஞர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர் அது தங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மனதை அமைதிபடுத்தி வைக்கிறது என்று கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.

ஹோடா எல்-ஷர்காவி என்ற பெண்மனி கேம்பிரிட்ஜ் பள்ளிவாசலில் புதிய முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்ய வகுப்புக்கள் நடத்துகிறார். இப்படி பல புதிய முஸ்லிம் பெண்கள் எல்லாம் கற்றறிந்து கல்விமான்களாக விளங்குகின்றனர். அவர்கள் சமய சகிப்புத்தன்மை கொண்ட பல்கலைகழக வளாகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

லோரா கோவன் ஹார்வார்டு கல்லூரியின் ஜூனியர் கல்லூரி மாணவி. அவரின் வயது 20. அவரின் சக மாணவர் ஒருவர் அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது இஸ்லாமிய அறிவை இன்டர்நெட் மற்றும் கல்லூரி வகுப்பறை இவைகளில் வளர்த்துக் கொண்டார். 4 மாதங்களுக்கு முன் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தைப் பற்றி நான் கண்டது, கேட்டது அனைத்தும் என் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் தொழுகையை நிறைவேற்றிய ஒவ்வொரு வேளையிலும் என் தோளிலிருந்து பெரும் சுமை கீழிறக்கப்பட்டதாக உணர்கிறேன். அது வர்ணிக்க முடியாத உணர்வு. அந்த நேரத்தில் நான் தனிமையில் விடப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் நெகிழ்வுடன்.

நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் இஸ்லாம் இவவாறெல்லாம் வேகமாக பெண்களை கவர்ந்துள்ளது. இவ்வாறு இஸ்லாம் அசுரபலத்தில் வளர்ந்து கொண்டுருக்கையில் சில விசமிகள் பொருக்க முடியாமல் சில தவறான ஆக்கங்களை நிறுவியும், அவதூறான செய்திகளை பரப்பியும் வருகிறார்கள், நாங்கள் ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம் அது இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம்,

நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள் அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (அல்குர்ஆன் 7:181)

ிருக்குர் ஆன் மனித சமூகத்திற்கு நேர்வழிகாட்டியாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறியக்கூடியதாகவும் இருக்கிறது.

நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். (அல்குர்ஆன் 86:13)

இது மட்டுமே இறைவனால் ஏற்றுக்கொள்ளக் கூடியதும், முடிவில் எல்லா மதங்களை விடவும் மிகைத்து நின்று வெற்றிபெரும். ஆகவே நீங்கள் எவ்வளவுதான் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் இஸ்லாம் என்கின்ற சத்திய ஒளிக்கு என்றைக்குமே திறையிட முடியாது என்பதை எல்லாம் வல்ல இறைவன் குர் ஆனில் பல்வேறு வசனங்களின் மூலம் இந்த சமூகத்திற்கு தெளிவுபடுத்துகிறான்,

(நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக.( 17:81)

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம் அதனால், சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.( 21:18)

இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) இறைவனுடைய பிரகாசத்தை அணைத்து விட விரும்புகின்றனர். எனினும் இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாச்தைப் பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப் போவதில்லை. (சூரா அத்தவ்பா : 32)

Tuesday, March 11, 2008

தயாரித்த போதே குண்டுவெடித்தது ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகாயம்

திருவனந்தபுரம்,மார்ச். 11-

திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37). சம்பவத்தன்று இரவு உடல் முழுவதும் படுகாயங்களுடன் சுரேஷ்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக நடந்த போலீஸ் விசாரணையில் சுரேஷ்குமார் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்பதும், சம்பவத்தன்று அவர் வீட்டில் வெடிமருந்துகள் வைத்து வெடிகுண்டு தயாரித்தப்போது வெடிமருந்துகள் வெடித்ததில் அவர் படுகாயம் அடைந்ததும் தெரிய வந்தது.இந்த விபரங்களை போலீசார் நீதிபதிக்கு அறிக்கை யாக சமர்பித்தனர். அவர் சுரேஷ்குமாரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவருக்கு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை நடந்து வருகிறது.வெடிமருந்துகள் பதுங்கி வைத்திருந்தாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் அவர் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

Monday, March 3, 2008

Dozens killed in assault on Gaza

Dozens killed in assault on Gaza


The Israel-Hamas clashes of Saturday were the deadliest in more than a year in the Gaza Strip [AFP]
At least 35 people have been killed in the last 24 hours as Israel continues a major assault in Gaza that has left many children and civilians dead.

The operation in the Jabaliya refugee camp on Saturday marks the deadliest day of fighting in the Hamas-ruled territory for more than a year.
Sixty-eight Gazans have died since the operation - which followed the death of an Israel civilian in a Palestinian rocket attack - began four days ago.

More than 120 Palestinians have also been wounded.

At least 10 of those killed were Hamas fighters and two were from the Islamic Jihad.
Muawiya Hassanein, the head of emergency services in Gaza, said those killed include at least four children and three women.

Israeli troops injured

The Israeli army confirmed its operations in northern Gaza, with the Israel Army Radio reporting that five soldiers were lightly or moderately wounded in the fighting.

The offensive began before dawn when Israeli tanks, supported by helicopters, pushed into the Jabaliya refugee camp in northern Gaza.

Witnesses said the Jabaliya deaths occurred as a result of gun battles between Palestinian fighters and Israeli soldiers.Tariq Dardouna, a Palestinian resident trapped in his house in east Jabaliya, told Al Jazeera that Israeli forces targeted civilians."The Israeli army opens fire at everything in our area, including children and houses. There are injured children bleeding inside their houses," Dardouna said."They are opening fire at everything."

He accused "regional and internal parties" of being involved in the conflict, as well as an "Israeli conspiracy".In Ramallah, Mahmoud Abbas, the president, condemned the escalating Israeli military operation in Gaza, and called for its immediate end.

"It's very regrettable that what is happening is more than a holocaust. We tell the world to see with its own eyes and judge for itself what is happening and who is carrying out international terrorism," Abbas later told reporters.

Comparisons to a "holocaust" apparently refer to remarks made by Matan Vilnai, Israel's deputy defence minister, who earlier used the Hebrew word "shoah" - generally used about the Nazi Holocaust - in remarks to army radio on Friday.

"By intensifying the rocket fire and extending their reach [fighters in Gaza] are bringing onto themselves a worse catastrophe [shoah] as we will use all means to defend ourselves," Vilnai said.

In his press conference, Abbas said: "It is regrettable that Israel uses this word, banned for more than 60 years, the word 'holocaust,' and we demand that the world respond."

An Israeli army spokeswoman said about 20 rockets were fired into Israel on Saturday, including three Soviet-designed Grad missiles, which are more powerful and accurate than locally produced Qassams.

Three Israelis were injured by rockets that reached Ashkelon, a major southern city with a population of 120,000 people.

Israeli leaders earlier said cross-border rocket fire might leave them no choice but to launch a broader military offensive against Hamas.Ehud Barak, Israel's defence minister, said on Thursday that "a major ground operation was real and tangible" and that Israel was "not afraid of it".

Barak's threat of a full-scale invasion came on the same day that an Israeli missile attack killed five children playing football.

Civilians were caught in the crossfire as Israelisoldiers battled fighters in Jabaliya [AFP]Hamas said it has hit Israel with more than 80 rockets during the same three-day period. Ehud Olmert, the Israeli prime minister, has so far been wary of launching a major ground offensive, which could incur heavy casualties and derail US-backed peace talks with Abbas.
But domestic pressure is growing.

Israel's Yedioth Ahronoth newspaper said Barak had sought to prepare the way for an offensive by sending confidential messages to world leaders, including Condoleezza Rice, the US secretary of state, who is due to visit the region next week.


Source: Al Jazeera and agencies

Sunday, March 2, 2008

மனித நீதிப் பாசறையின் மீதும் முஸ்லிம்களின் மீதும் களங்கம் ஏற்படுத்தி வீன்பழி சுமத்தும் வகையில் பொய்யான வெடிகுண்டு வழக்கை ஜோடனை செய்த கோவை போலிஸ்


கிரைன்டர் கண்டன்சரும், பேட்டரியும் பாமாக காட்டப்பட்ட விதம்

இவ்வழக்கு எப்படி ஜோடிக்கப்பட்டது, உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலைநாட்ட எப்படியெல்லாம் MNP,TMMK,ஐக்கிய ஜமாத் என பல்வேறு அமைப்புகளும் களம் இறங்கி போராடி நியாம் கிடைக்க வழி செய்தன என்பதை தெளிவாக அறிவதற்கு இக்கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் உள்ள கட்டுரைகளை வாசியுங்கள்.

கோவையில் கடந்த ஜீலை (22.07.2006) அன்று 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ழைகது செய்தனர். யாரும் எந்த புகாரும் கொடுக்காத நிலையில் இரவு நேரத்தில் திடீரென அந்த இளைஞர்களின் வீட்டில் அத்து மீறி நுழைந்து அவர்களை கைது செய்து அவர்க்ள வீட்டில் குழந்தைகள் படிக்க வைத்திருந்த வரைபடத்தையும், கிரைன்டர் கண்டன்சரையும், வீணாகிப்போன பேட்டரிகளையும் எடுத்தக்கொண்டு அவர்களை தீவிரவாதிகள் எனவும் அவர்களிடம் இருந்து கோவை மாநகரையே தகர்க்க கூடிய அளவிற்கு சக்தி பெற்ற ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் கோவை மாவட்ட உளவுத்துறை உதவி ஆணையர் ரத்ன சபாபதி கூறினார்.
முஸ்லிம்களுக்கெதிரான குரோதத்தையும், மனித நீதிப் பாசறைக்கெதிரான வண்மத்தையும் மனதில் வைத்துக்கொண்டு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மனித நீதிப் பாசறையை சேர்ந்தவர்கள் என கதை கட்டினார்.
ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவை அனைத்தும் வடிகட்டிய பொய் என்பது நிரூபனமானது. தமிழக அரசும் அவர் மீது முதல் கட்ட நடவடிக்கை எடுத்து பணிமாற்றமும், இடமாற்றமும் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் மனித நீதிப் பாசறை, கோவை ஐக்கிய ஜமாத், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கடுமையான தொடர் முயற்சிகளால் இவ்வழக்கு விசாரனை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.இவ்வழக்கு குறித்து விசாரனை நடத்திய சி.பி.சி.ஐ.டி (SIT) சிறப்பு புலனாய்வு குழு தனது இறுதி அறிக்கையை கோவை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது.

கோவை உளவுத்துறை ஏ.சி ரத்தின சபாபதி உருவாக்கிய மூன்று தனிப்படைகள் 5 முஸ்லிம் அப்பாவி இளைஞர்களை கைது செய்துள்ளனர் என்பதும், இந்த மூன்று தனிப்படைகளுக்கு தலைமையேற்ற ஏ.சி க்கள் திரு.குமாரசாமி, திரு. அண்ணாதுரை, திரு. ஜெய பாண்டியன் ஆகியோர்கள் தாங்களே பைப் வெடிகுண்: (Pipe Bomb) மற்றும் கையெறி குண்டு (Hand Granade) ஆகியவற்றை தயார் செய்தள்ளனர் என்பதும் போலிஸ் சாட்சிகள் மற்றும் இதர சாட்சிகள் மூலம் நரூபனம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரனையில் முன் தேதியிட்ட ஆவணங்களை ரத்தின சபாபதி தூண்டுதலின் அடிப்படையில் செயல்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் பால்ராஜால் தயார் செய்யப்பட்டுள்ளன என்பதும் BDDS (Bumb Detection and Defuse Squad) எஸ்.ஐ திரு. மகேந்திரன் அவர்கள் வெடிகுண்டைக் கைப்பற்றிய இடத்திற்கு நேரில் வந்ததாகவும் வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்ததாகவும், மேற்படி இன்ஸ்பெக்டர் பால்ராஜே பொய்யாக மகஜரை (ஆவணங்களை) தயாரித்து அதில் அவரே எஸ்.ஐ மகேந்திரன் கையெழுத்தை போலியாக போட்டுள்ளார் என்பதும் நிபுணர்கள் (Expert opinion) மூலம் நிருபனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும், வெடிகுண்டுகளை போலிசாராலேயே தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும், ஆவணங்கள் போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும் Nacro Analysis Test எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையிலும் நீரூபனம் செய்யப்பட்டுள்ளது.

மனித நீதிப் பாசறையின் கோரிக்கைகள்
1. ரத்தின சபாபதி மற்றும் இதற்கு துனை போன அதிகாரிகளின் கபட நாடகத்தால் தன்னுடைய எதிர்காலத்தை தொலைத்து விட்டு நிர்க்கதியாக நிற்கும் இந்த அப்பாவிகளுக்கு தமிழக அரசு ஈட்டுத்தொகை வழங்க வேண்டும்.
2. தமிழக காவல்துறைக்கு கலங்கம் ஏற்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அதற்கு மாறாக "வேலியே பயிரை மேய்வது போல்" ஐந்து முஸ்லிம்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய முன்னாள் உளவுத்துறை அதிகாரி ரத்ன சபாபதி மீதும் மற்றும் அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் துறை சார்ந்த விசாரனை மேற்க்கொள்ளப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக் மேற்க்கொண்டு நரந்தரப் பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட வேண்டும்.
3. தமிழக அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால் போலியாக புனையப்பட்ட வழக்குகளின் மூலம் முஸ்லிம்கள் மீது அவதுர்று சுமத்தி, மனித உரிமைப் பணிகளையும் சமூக சேவைகளையும் செய்து கொண்டு வரும் மனித நீதிப் பாசறையின் மீது களங்கம் கற்பித்து, தமிழகத்தை பீதிக்குள்ளாக்கிய ரத்தின சபாபதியை மீண்டும் அதே ஊரில் பணியில் அமர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ப்தியையும், முஸ்லிம்கள் மத்தியில் அடுத்து என்ன நாடகம் அரங்கேறுமோ என்ற அச்சத்தையும் அளித்துள்ளது. தமிழக அரசு இதை கவணத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.
4. மனித நீதிப் பாசறையின் மீதும் கோவை முஸ்லிம்கள் மீதும் இப்பொய்வழக்கு போடுவதற்கு காரணம் என்ன என்பதையும் இதன் பின்னணியில் தேச விரோத சக்திகளின் தூண்டுதல் உண்டா என்பதையும் தமிழக அரசு கண்டறிந்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராகவும் இப்பொய் வழக்கு மூலம் சாதிக்க நினைத்த மற்றும் தூண்டுதலின் பின்னணி என்ன என்பதை கண்டறிதல் வேண்டும் எனவும் தனது அறிக்கையில் மனித நீதிப் பாசறையின் சார்பாக அதன் மாநிலத் தலைவர் திரு.எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கோரியுள்ளார்கள்.

கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 7 பேர் கைது

கடையநல்லூர், பிப். 28:

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றவர்களை போலீஸôர் விரட்டியடித்தனர்.

இந்த மோதலில் போலீஸ் தரப்பில் 4 பேரும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பில் 7 பேரும் காயமடைந்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, போலீஸôரைக் கண்டித்து கடையநல்லூர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டிய மனித நீதிப் பாசறை அமைப்பைச் சேர்ந்த அல்லிமூப்பன் தெருவைச் சேர்ந்த அகமது மகன் லுக்மான்ஹக்கீம் (21), சிவகாசியைச் சேர்ந்தவரும் தற்போது கடையநல்லூரில் வசித்து வருபவருமான இக்பால் மகன் அப்துல்காதரையும் (23) கடையநல்லூர் போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை இந்த அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கடையநல்லூர் பெரியபள்ளிவாசல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் எனக்கூறி போலீஸôர் தடுத்தனர். இருப்பினும் அந்த அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போலீஸôர் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீஸôர் சிலர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸôர் லேசான தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். இந்நிலையில், இப்பிரச்சினையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் காவலர்கள் ஞானசிகாமணி (50), வேல்முருகன் (43), ஜெயக்குமார் (31), சுடலை (32) ஆகிய 4 பேர் காயமடைந்து கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல போலீஸôர் தடியடி நடத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸôர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடையநல்லூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர். கடையநல்லூர் அரசு மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

Saturday, March 1, 2008

நெல்லை போலீசுக்கு எதிராக போராட்டம் கோவைவை போலீசார் தந்தனர் அனுமதி

கோவை :கோவை போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகநெல்லையில் போஸ்டர் ஒட்டிய நபர்களை, அங்குள்ளபோலீசார் கைது செய்தனர். அதைக் கண்டித்து, கோவையில்ஆர்ப்பாட்டம் நடத்த, கோவை போலீசார் அனுமதி வழங்கி,பாதுகாப்பும் அளித்தனர்.

கோவை மாநகர போலீஸ் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகூடுதல் துணைக்கமிஷனர் ரத்தினசபாபதி பதிவு செய்தவழக்கு, சி.பி.சி.ஐ.டி.,விசாரணைக்கு மாற்றப்பட்டு, கோர்ட்டில்அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ரத்தினசபாபதிஉள்ளிட்ட சில அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வலியுறுத்திநகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

நெல்லை மாவட்டம், கடையநல்லுõரில் சுவரொட்டி ஒட்டியஇருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதைக் கண்டித்து, தடையை மீறி அங்கு ஆர்ப்பாட்டம்நடத்த முயன்ற அமைப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர்.

போலீசை பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்கியதாகஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அந்த சம்பவங்களைக் கண்டித்து, "மனித நீதி பாசறை'அமைப்பினர், கோவை நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த, அனுமதிகோரினர்; உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படிநேற்று மாலை காந்திபுரம், தமிழ்நாடு ஓட்டல் முன் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய அந்த அமைப்பின்நிர்வாகிகள், கடையநல்லுõர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும்டி.எஸ்.பி., அசோக்குமார் ஆகியோரை கடுமையாக விமர்சித்தனர்.

கோவை நகர போலீஸ் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகூடுதல் துணை கமிஷனர் ரத்தினசபாபதியை பணியில் இருந்து"டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.போலீஸ்அதிகாரிக்கு எதிராக ஒரு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த,போலீசாரே அனுமதி அளித்திருப்பது கோவை போலீசாரிடம்அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.