Monday, February 25, 2008

சரியும் அமெரிக்கப் பொருளாதாரம், உலகம் அமைதியை நோக்கி...


ஏழை, நடுத்தர நாடுகளின் பொருளாதாரத்தைப் பல்வேறு வழிகளிலும் சுரண்டி அதன் மூலம் தனது இராணுவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொண்டு இன்று உலகின் மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த ஓரிரு வருடங்களில் மிகப் பெரியச் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே! பொருளாதாரத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உலகின் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளைப் பயமுறுத்திக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று சிறிது சிறிதாக அதே பொருளாதாரத்தின் மூலம் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.


இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தை அமெரிக்க டாலர்கள் ஆக்ரமித்து வந்ததற்கு 21 ஆம் நூற்றாண்டு விடை கூற நெருக்கிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்த அமெரிக்கப் பொருளாதாரம், உலக வர்த்தகத்தின் பெரும்பங்கு அமெரிக்க டாலரை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதின் மீதே கட்டமைக்கப்பட்டிருந்தது. 2000 நூற்றாண்டின் 80, 90கள் வரை உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயத்தைக் குறித்து உலகம் சிந்திக்காமல் இருந்ததே அமெரிக்காவின் இடைப்பட்ட கால இமாலய எழுச்சிக்கு அடிப்படைக் காரணமாகும். இதற்கு யூரோவின் மூலம் முதல் அடியைக் கொடுத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.


உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயம் என்பதே அப்பொழுது வரை எவரும் மனதில் நினைத்துக் கூடப் பார்க்காத விஷயமாக இருந்தக் கால கட்டம் அது. அன்று விழுந்த முதல் அடியிலிருந்து எழுந்து நிற்க "தீவிரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பொய்யான முகமூடியுடன் களமிறங்கிய அமெரிக்காவிற்கு அதுவே நினைத்துப் பார்க்காத பதிலடியைத் திரும்பக் கொடுத்தது எனலாம். இப்பொழுது வரை பின்னணியில் இயங்கியது யார்? என்பதில் எவ்விதத் தெளிவான முடிவுக்கும் வர இயலவில்லை.


வெள்ளை மாளிகையின் தற்போதையக் காவலாளி ஜார்ஜ் புஷ் கூட இதன் பின்னணி கதாநாயகனாக இருக்கலாம். 2001 செப்டம்பர் 11 நிகழ்வைக் காரணம் காட்டி, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளைக் கபளீகரம் செய்வதோடு, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளையும் சின்னாபின்னப்படுத்துவதுமே அதன் முக்கியக் குறிக்கோளாய் இருந்தது.


அதன் பின்னணியில் சரிந்து வரும் தனது பொருளாதாரத்தைக் குவிந்துக் கிடக்கும் அரபு எண்ணெய் வளம் மூலம் நிமிர வைப்பதைத் தனது மறைமுக நோக்கமாகவும் கொண்டு, தான் வளர்த்து விட்ட உசாமா, சதாம் போன்றவர்களை எதிரிகளாகச் சித்தரித்துக் களமிறங்கிய புஷ்ஷின் அமெரிக்காவிற்குத் தற்பொழுது அதுவே தாங்கவொண்ணாச் சரிவைப் பரிசாக அளித்துள்ளது.


சரிந்த அமெரிக்கப் பொருளாதாரத்தால் மத்தியக் காலகட்டத்தில் அமெரிக்க டாலரை அடித்தளமாக வைத்துத் தங்களின் நாணய மதிப்பையும் வியாபாரத்தையும் அமைத்துக் கொண்ட நாடுகளுக்கு இப்பொழுது அமெரிக்க டாலர் மிகப்பெரிய தலைவலியாகவும், தாங்கவொண்ணா சுமையாகவும் மாற ஆரம்பித்துள்ளது.


இதனை நன்றாக உணர்ந்து கொண்ட அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கழுகுக் கண்களுக்கு இரையாகக் குறிவைக்கப்பட்டிருக்கும் வெனிசுவேலா, ஈரான் போன்ற நாடுகள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு உடனடியாகத் தங்களின் அனைத்துப் பண்டமாற்று, உலக வர்த்தக முறைகளையும் அமெரிக்க டாலரிலிருந்து 90-களில் மாற்றாக வெளிவந்த யூரோவிற்கு மாற்றி விட்டன. அத்தோடு அமெரிக்காவின் சுரண்டலுக்கு இலக்கான அனைத்து நாடுகளையும் தங்கள் வர்த்தகப் பரிமாற்றத்தை டாலரிலிருந்து மாற்றக் கோரிக்கை விடுத்தன.


எனினும் அப்பொழுது அதன் அவசியத்தை உணர்ந்துக் கொள்ளாத கத்தர், சவூதி, அமீரகம் போன்ற அரபு நாடுகள் கடந்த 6 மாத கால அளவில் வரலாறு காணாத அளவில் தங்களின் நாணயமதிப்பில் வீழ்ச்சியையும், வளைகுடா நாடுகளில் கேள்வியே பட்டிராதப் பெரும் பணவீக்கத்தையும் சந்தித்தன. கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்க டாலரின் மூலதனம் 16.2 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர் எவ்வளவு வீழ்ச்சியைச் சந்தித்ததோ, அதே அளவிற்கான வீழ்ச்சியை அமெரிக்க டாலர் மூலம் வர்த்தகம் அமைத்துக் கொண்ட மற்ற நாடுகளின் நாணயங்களும் வீழ்ச்சியைச் சந்தித்தன.


இந்நிலையில் உலக கரட்டு எண்ணெய் (Crude Oil) வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஓபெக் தற்பொழுது ஈரான் மற்றும் வெனிசுவேலாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டுத் தங்களின் வர்த்தகத்தை அமெரிக்க டாலரிலிருந்து மாற்றுவதற்கான ஆலோசனை செய்ய முன் வந்துள்ளன.


ஈரான் மற்றும் வெனிசுவேலாவின் கோரிக்கையைக் குறித்து விவாதிக்க ஓபெக் உறுப்பினர் நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு உடன் கூடும் என ஓபெக் தலைவர் ஷகீப் கலீல் கூறியுள்ளார். உலக எண்ணெய் வியாபாரத்தில் 40 விழுக்காடு பங்கு வகிக்கும் ஓபெக்கின் இம்முடிவு நினைத்தது போல் அமெரிக்க டாலரிலிருந்து மற்றொரு நாணயத்திற்குத் தனது வியாபாரத்தை மாற்றும் எனில் அது அமெரிக்காவை எழுந்து நிற்க இயலாத நிலைக்குத் தள்ளிவிடும் என்பதில் மாற்றமில்லை.


ஏற்கெனவே அமெரிக்க டாலர் மூலமான தனது அனைத்து உலக வியாபாரத்தையும் மாற்றியிருந்த ஈரானைப் பின்பற்றி இன்னும் ஆறு மாத காலத்தில் கத்தரும் தனது எல்லாவிதமான வணிகப் பரிமாற்றத்தை மற்றொரு நாணயத்திற்கு மாற்றும் என கத்தர் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜாஸிம் அல்-தானி கூறியிருந்தார்.


அதே போன்று குவைத்தும் அமீரகமும் இதே திசையில் பயணிக்கவிருப்பதைக் குறித்த அறிகுறிகளைத் தெரிவித்திருந்தன.


உலக வர்த்தகத்தின் மிகப் பெரும்பங்கை நிர்ணயிக்கும் அரபு நாடுகளும் உலக எண்ணெய் உற்பத்தியின் 40 விழுக்காட்டை நிர்ணயிக்கும் ஓபெக்கும் தங்களின் இம்முடிவுகளில் எவ்வித மாற்றமும் இன்றி அமெரிக்க டாலரிலிருந்து மாறும் எனில் அது அமெரிக்கப் பொருளாதாரத்தில் சீரழிவை ஏற்படுத்துவதோடு உலக நலனுக்குத் தீங்கான அதன் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் நிச்சயம். அது உலகின் தற்போதைய உறுதியற்ற நிலையையும் மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை.


Thanks : சத்தியமார்க்கம்.காம்

06. தூக்கிப் போட்ட கிரெடிட் கார்டு கிளப்பிய பூதம் : 50 ஆயிரம் ரூபாய் கட்ட வங்கி ஓலை

மும்பை:

`சே! கிரெடிட் கார்டை கண் டாலே எரிச்சலா வருது...அப்படியிருக்கும் போது, எனக்கு கிரெடிட் கார்டை எப்படி வங்கி அனுப் பியது...?' என்று எரிச்சல் பட்டு கிரெடிட் கார்டை , வெறுப்பில் தூக்கி குப்பைத் தொட்டியில் தப்பித்தவறிக் கூட போடாதீர்கள்!

குப்பைத்தொட்டியில் போட்ட கிரெடிட் கார்டு, கல்லூரி பேராசிரியருக்கு பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பிரபலக் கல்லூரியின் பேராசிரியர் இமானுவேல். வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், ஏ.டி.எம்.,கார்டு வாங்கிக்கொள்ளவில்லை. வங் கிக்கு சென்றுதான், `பாஸ்' புத்தகத்தை தந்து, பணம் எடுப்பார்; பணம் எடுத்ததும், கணக்கு சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்வார்.

இவருக்கு சில மாதம் முன், மொபைல் போனில் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய பெண்,` உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா சார்? ஆண்டு சந்தா இலவசம் சார்' என்று குழைய குழைய பேசினார். பேராசிரியரோ கடும் கோபத்துடன் , `கிரெடிட் கார்டில் எனக்கு நம்பிக்கை இல்லை; எனக்கு வேண்டாம்' என்று மறுத்துவிட்டார்.

ஆனால், அடுத்த சில நாளில், அவர் பெயருக்கு ஒரு தபால் வந்தது. கூரியர் ஊழியர் அதை கொடுத்து விட்டு சென்றுவிட்டார். கவரை பிரித்துப் பார்த்தவருக்கு கடுங்கோபம்; `கிரெடிட் கார்டை தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டு விட்டார்.

அத்தோடு அந்த விஷயத்தை மறந்தும் விட்டார். அடுத்த ஒரு மாதத்தில், வங்கியில் இருந்து ஒரு கடிதம் வந்தது. `உங்களுக்கு அளிக்கப்பட்ட கிரெடிட் கார்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப் பட்டுள்ளது; அதை 45 நாட்களுக்குள் திருப்பிக் கட்டவேண்டும்' என்று அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இதைப்பார்த்ததும், பேராசிரியருக்கு வந்ததே... உச்சகட்ட கோபம், நேராக வங்கிக்கு போனார். அதிகாரியை சந்தித்து,`நான் கேட்காமலேயே கிரெடிட் கார்டு தந்தீங்க; எனக்கு வேண்டாம் என்று அதை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டேனே; அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அதை பயன்படுத்தியதற்கு ஆதாரம் உண் டா?' என்று சண்டை போட்டார்.

`சார், நீங்க கையெழுத்து போட்டு, கிரெடிட் கார்டை வாங்கியிருக்கிறீர்கள்;அப்படியானால்,அதை நீங்கள் தான் பயன்படுத்தி வருகிறீர்கள் என்று தான் எங்களால் உணர முடியும். யாராவது உங்கள் கார்டை பயன்படுத்தி இருப்பதாக நினைத்தால், முன்னதாக புகார் தந்திருக்கலாம்' என்று அதிகாரி விளக்கம் சொல்ல, பேராசிரியர் தலையில் `ஜிவ்வ்' என்று ஏறிவிட்டது.

குப்பைத்தொட்டியில் போட்ட கிரெடிட் கார்டை யாரோ எடுத்து, சட்டவிரோதமாக பயன்படுத்தி, 50 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து நுகர்வோர் கோர்ட்டுக்கு போவதா, பணத்தை கட்டுவதா என்று குழம்பிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர்.இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில்,`கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது மிகவும் உஷராக இருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு வேண்டாம் என்று எண்ணினால், அதை கூரியர் ஊழியரிடம் இருந்து வாங்காமல் திருப்பி அனுப்பிவிடலாம். கையெழுத்திட்டு வாங்கிவிட்டு, அதை மறந்துவிட்டால், அதை யாராவது பயன்படுத்த நேரிடும். அது தான் பேராசிரியருக்கு ஏற்பட்ட விபரீதத்துக்கு காரணம்' என்று தெரிவித்தனர்.

Thanks : Dinamalar

760 கோடி ஆண்டுகளில் பூமி 'புஸ்'!


லண்டன்: இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமி இருக்காது. அதை சூரியன் விழுங்கி விடும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்தின் சஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஸ்மித் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
சூரியன் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வருகிறது. இப்படியே போனால் இன்னும் 760 கோடி ஆண்டுகளில் அது பூமியை விழுங்கி விடும்.
சூரியனின் வெப்பம் காரணமாக பூமியில் எதுவும் இருக்காது, எல்லாம் சாம்பலாகி விடும். சூரியனின் வெப்பத்தால் கடல்கள் அனைத்தும் ஆவியாகி முற்றிலுமாக வற்றிப் போய் விடும் என்கிரார் ராபர்ட் ஸ்மித்.
இதைத் தவிர்க்க முடியாதா, பூமியைக் காப்பாற்ற முடியாதா என்ற கேள்விக்கு ஸ்மித் பதிலளிக்கையில், இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.
வான்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு பெரிய விண்கல்லை, பூமியின் புவி வட்டப் பாதைக்கு இழுத்து, அதனுடன் பூமியை மோத விட வேண்டும். அப்படி மோதினால் நமது புவி வட்டப் பாதை மாறி வேறு பாதைக்கு நாம் வீசப்படுவோம். அப்படிச் செய்தால் சூரியனின் கோரப் பிடியிலிருந்து பூமி தப்பலாம்.
இது சாத்தியமா, பேத்தலாக இருக்கிறதே என்று நினைக்கக் கூடாது.
இன்னும் சில நூற்றாண்டுகளில் இப்படி ஒரு மோதலை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே பூமி அழியலாம் என்று பயப்படுவதை விட தப்பி விடும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கலாம் என்கிறார் ஸ்மித்.
பூமியையே இடம் மாற்றும் தொழில்நுட்பமா.. தலை சுத்துது!!

இந்தியாவில் கொலை குற்றவாளி அடித்து நொறுக்கப்பட்டது தொடர்பாக ஏழு பேர் கைது

February 25th, 2008

இந்தியாவில் கொலை குற்றவாளி ஒருவரை அவர் சுயநினைவை இழக்கும் வரையில் பொலிஸாரின் முன்னிலையிலேயே ஒரு கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த அந்நபரை வெளியே இழுத்து வந்த கும்பல் அவரை அடித்து துவம்சம் செய்துள்ளது.

இந்திய தொலைக்காட்சிகளில் வெளியான காட்சியில், கயிறு ஒன்றின் மூலம் கட்டி இழுத்து வரப்பட்ட அவரது உடலில் அசைவுகள் நிற்கும் வரையில் அவரை கும்பல் அடித்து உதைத்து நொறுக்கியுள்ளது. தற்போது அந்நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி: தமிழ் பிபிசி

Saturday, February 23, 2008

பீகாரில் செல்போன் திருடன் அடித்துக் கொலை


ஹாஜிபூர், பிப்.24-

பீகாரில் செல்போன் திருடனை போலீசார் முன்னிலையிலேயே ஒரு கும்பல் கொடூரமாக அடித்துக் கொன்றது.

நெஞ்சைப் பதறச் செய்யும் இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நண்பர்கள்

பீகார் மாநிலம் ஹாஜிபூரைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவரது நண்பர் ஓம்பிரகாஷ். வாலிபர்
களான இவர்களுக்குள் செல் போன் திருட்டு தொடர்பாக திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறில் ஆத்திரமடைந்த ரவிகுமார் ஓம்பிரகாஷை தாக்கி விட்டார்.

இதையொட்டி அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே ஓம்பிரகாசின் நண்பர்களும் உறவினர்களும் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ரவிகுமாரை கை, கால்களை கட்டி வெளியே தரதரவென இழுத்து வந்தனர். அவரை அவர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீசார் அந்த கும்பலிடம் இருந்து ரவிகுமாரை மீட்டு படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அடித்துக் கொலை

அதன் பின்னரும் அந்தக் கும்பல் விடவில்லை. ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ரவிகுமாரை நடு ரோட்டுக்கு இழுத்து வந்தனர். கைகளாலும், செங்கற்கல்லாலும், தடியாலும் சரமாரியாக அடித்து நையப்புடைத்தனர். ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட ரவிகுமார் சிறிது நேரத்தில் துடிதுடித்து செத்தார். போலீசார் முன்னிலையிலேயே நடந்த இந்தப் படுகொலை நேற்று இரவில் அனைத்து தொலைக் காட்சிகளிலும் ஒளி
பரப்பானது. அதைப் பார்த்து பரிதாபப்படாதவர்களே இருக்க முடியாது.

சஸ்பெண்டு

இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருந்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையொட்டி சில போலீஸ்
காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி கண்டனம்

இதற்கிடையே டெல்லியில் நீதித்துறை சீரமைப்பு தொடர்பான கருத்தரங்கு நேற்று நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கருத்தரங்கை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, ``குற்றவாளியை தண்டிக்க சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அது போன்ற கலாசாரத்தை அனுமதிக்கவும் முடியாது'' என்று குறிப்பிட்டார்.


Thanks : Daily Thanthi

Friday, February 22, 2008

தேவையில்லை இனி இவர்களும் இவர்களின் பொருட்களும்

நபி (ஸல்) அவர்களை நேசிக்கும் உண்மையான முஸ்லிம்களுக்காக........

வாங்காதீர்கள் டென்மார்க்கின் பொருட்களை.....










நன்றி : Irai Adimai (Photos)

Thursday, February 21, 2008

மண்ணறை வாழ்க்கை

மண்ணறை வாழ்க்கை

K.L.M. இப்ராஹீம் மதனீ

உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, "மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென" அவர்கள் கூறுகின்றார்கள் நாமோ, "மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது" என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள், சரியான விடை சொல்பவர்களுக்கு, சுவர்க்கமும், தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம். இதனை, பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர். அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை 'இல்லிய்யீனிலே' (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்) அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து, உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீர் யார்? எனக் கேட்பார். நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.

நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும். அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வர். அவர் அவனை நோக்கி, கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். நனைத்த கம்பளி துணியிலிருந்து முள்ளுக் கம்பியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். (இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) கொஞ்ச நேரங்கூட தன் கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது எவனுடைய கெட்ட உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ

நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் - அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)
ஏக இறைவன், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள "ஸிஜ்ஜீன்" (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும். பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنْ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ

இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31) இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். "கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது" என்பான். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து அவன் பொய் சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான்.

(நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நல்லடியாரின் உயிரும், கெட்ட அடியானின் உயிரும் எப்படி பிரிகின்றது? அவ்விருவரின் கப்ருகளின் நிலை எப்படி அமைகின்றன என்பதை அறிந்தீர்கள். நமது மண்ணறையும் சுவர்க்கப் பூங்காவாக அமைய வேண்டுமானால் மரணிப்பதற்கு முன்பே அதற்குரிய அமல்களை அவசியம் செய்ய வேண்டும். அமல்கள் செய்யாமல் மரணிப்பவர், தன்னுடைய மரண நேரத்தில் இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ்வதற்கு அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார். ஆனால், அவருக்கு கொஞ்ச நேரம் கூட கொடுக்கப்படமாட்டாது என்பதை அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையில் கூறுகின்றான்.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمْ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِي. لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். "நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)

இவ்வளவுதான் இவ்வுலக வாழ்க்கைமரணித்தவுடன் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பொருட்கள் மட்டும் பங்கு வைக்கப்படுவதில்லை நமது மனைவியையும் யாராவது மறுமணம் முடித்துக் கொள்வார்கள். நமது உடலை விட்டு உயிர் பிரிந்ததும், இவ்வுடலை எப்போது அடக்கம் செய்வது என்பதைப்பற்றித்தான் மக்கள் முதலில் பேசிக் கொள்வார்கள். இவ்வுளவுதான் இவ்வுலக வாழ்க்கை. நமது சொந்த பந்த உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.

கப்ரில் கேட்கப்படும் கேள்வியும் விடையும்
மனிதன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தன் வாழ்வை இவ்வுலகில் அமைத்துக் கொண்டானோ, அதற்கேற்ற பதிலை மலக்குகளிடம் கப்ரில் கூறுவான். கப்ரில் கேட்கப்படும் கேள்விகளின் விடைகளை வைத்தே சுவர்க்கமும், நரகமும் முடிவு செய்யப்படுகிறது. அப்படியானால், கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த கேள்விகளையும் விடைகளையும் நாம் எல்லோரும் தெரிந்தே வைத்திருக்கின்றோம். அதனால் அக்கேள்விகளுக்கான விடைகளை கப்ரில் அனைவராலும் சொல்லிவிட முடியுமா? நிச்சயம் முடியாது.
யார் இவ்வுலகில் அல்லாஹ்விற்கு, கட்டுப்பட்டு நடந்தாரோ அவர்தான் "என் இறைவன் அல்லாஹ்" என்று கூறுவார். யார் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நடந்தாரோ அவர்தான் எனது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் என்று கூறுவார். யார் இஸ்லாத்தை மார்க்கமாகப் பின்பற்றினாரோ அவர்தான் "என் மார்க்கம் இஸ்லாம்" என்று கூறுவார். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவு படுத்துகின்றது.

(சரியான விடை சொன்ன அம்மனிதரைப்பார்த்து, நீ இப்படி சரியான விடை சொல்வாய் என்பது எங்களுக்குத் தெரியும், காரணம்) நீ அப்படித்தான் வாழ்ந்தாய், அப்படியே மரணித்தாய், அப்படியே எழுப்பப்படவும் போகிறாய் என அம்மலக்குகள் கூறுவார்கள்.(முஸன்னஃப் இப்னு அபீஷைபா)
இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இம்மூன்று கேள்விகளுக்கும் விடை கூறும் விதமாக உங்களின் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

கப்ரைப்பற்றிய சில நபி மொழிகள்நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)

மண்ணறையில் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவனது இடம் அவனுக்குக் காட்டப்படும். 'மறுமை நாளில் இறைவன் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம்' என்று அவர்களிடம் கூறப்படும். (புகாரி, முஸ்லிம்)

ஒரு ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) மனிதர்கள் சுமந்து செல்லும் போது அவர் ஒரு நல்லடியாராக இருந்தால், "(நான் தங்குமிடத்துக்கு அவசரமாக) என்னை எடுத்துச் செல்லுங்கள்" எனக்கூறும். அவன் பாவியாக இருந்தால், "(எனக்கு) என்ன கேடுதான் பிடித்து விட்டதோ!" என்று கூறியவாறு அலறும். இந்த ஓசையை மனிதர்கள், ஜின்கள் தவிர எல்லா உயிரினங்களும் செவிமடுக்கும். மனிதன் அச்சத்தத்தைக் கேட்டால் மயங்கிக் கீழே விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
ஜனாஸாவை பின் தொடர்வதின் சிறப்புகள்யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் நற்கூலியை ஆதரவு வைத்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று, ஜனாஸா தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு "கீராத்" நன்மைகளைப் பெற்றுத் திரும்புகிறார். ஓவ்வொரு கீராத்தும் உஹது மலையைப் போன்றதாகும். யார் அந்த ஜனாஸாவின் தொழுகையில் (மட்டும்) கலந்து கொண்டுவிட்டு (நல்லடக்கத்துக்கு முன்) திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு "கீராத்" நன்மையைப் பெற்றுக் கொண்டு திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)

கப்ரின் வேதனைக்குக் காரணம் என்ன?கப்ரின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.

கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி?

1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பாச் செய்ய வேண்டும்.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளில் முடியுமானவைகளைச் செய்ய வேண்டும்.
3. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை முற்றாக விட்டுவிட வேண்டும்.

கப்ரின் வேதனையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து, அதை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கிவைப்பானாக!.

Thanks : Islamkalvi

Wednesday, February 20, 2008

வருடந்தோறும் 10 லட்ச மக்களை கொல்லும் அரக்கன்


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் மக்கள் புகையிலை என்னும் அரக்கனுக்கு அடிமைபட்டு பலியாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புகையிலை எந்த வடிவில் பயன் படுத்தினாலும் அது பயன்படுத்துவோரின் உயிருக்கு அபத்தாக முடியும். 10ல் ஒரு பகுதி ஆண்களின் மரணத்திற்கு புகை பிடிப்பது முக்கிய காரணமாக இருப்பதாக அய்வுகள் தெரிவிக்கின்றன.புகைபிடிப்பதால் மரணமடையும் 10 லட்சம் மக்களில் 70 சதவீதம் பேர் இளவயதிலேயே மரணத்தை தழுவு கிறார்கள் ஊனவும் இந்த அதிர்ச்சி செய்தி குறிப்பிடுகிறது.

யார் சிகரெட்டை தொடர்ந்து பயன் படுத்துகிறார்களோ அவர்கள் தங்களது வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள். பீடி புகைக்கும் ஆண்கள் 6 ஆண்டுகளை தங்கள் வாழ்நாளில் இழக்கிறார்கள். பீடி புகைக்கும் பெண்கள் தங்கள் வாழ்நாளில் 8 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள் எனவும் அந்த அதிர்ச்சி செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் மரணத்தை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பான A Nationally Representative Care - Control - Study of Smoking and Death in India வும் பிரிட்டனிலிருந்து வெளியாகும் The New England Journal of Medicine பத்திரிக்கையும் இணைந்து அந்த ஆய்வினை மேற்கொண்டன.பொதுவாக ஆண்களில் இறப்பு விகிதத்தை கணக்கெடுக்கும்போது 30 முதல் 69 வயது வரை மரணம் அடைபவர்களில் கணிசமானோர் புகை பிடிப்பவர்கள்தான் எனவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2010அம் ஆண்டில் இந்தியாவில் நிகழும் 10 இறப்புகளில் ஒன்று புகைப் பிடிப்பதால் நிகழும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்தியாவில் 60 கோடி மக்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் அவர். நமது இளைய தலைமுறையை புகையிலை அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டி யுள்ளது,அதற்கென சட்டங்களை வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை என மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

புகையிலையை அதிகமாகப் பயன் படுத்தி மரணமடைபவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கல்வியறிவு பெறாதவர்களாகவும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புகை பிடிக்கும் தீய பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் வெறும் இரண்டு சதவீதம் தான். அனால், சீனாவில் 9 சதவீதத்தினர் தங்களை புகை பிடிப்பதிலிருந்து மீட்டுக் கொண் டுள்ளனர்.

பிரிட்டனில் புகை பிடிப்பவர்களில் 40 சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்துள்ளனர். இது 20 அண்டு காலத்தில் நிகழ்ந்த மாற்றமாகும். 2003ல் ஜெனிவாவில் கூடிய மாநாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தங்கள் நாடுகளில் பின்பற்றப்போவதாக 183 நாடுகள் அறிவித்திருக்கின்றன.

நன்றி: தமுமுக இணையம்
Thanks : Satrumun

Monday, February 18, 2008

கைதி மனைவி கற்பழிப்பு, ஆபாச படம் எடுத்த போலீஸ்-கோர்ட் கண்டனம்

சென்னை: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியின் மனைவியை சிறைக் காவலர்கள் நான்கு பேர் கற்பழித்ததாக கூறப்படுவது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறைத்துறை கூடுதல் டிஜிபி அளித்த அறிக்கை திருப்தி தரும் வகையில் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலூர் சிறையில் 10 ஆண்டு சிறைத் தண்டனையின் கீழ் அடைக்கப்பட்டுள்ளவர் கணேசன். கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி சிறைக்கு வந்த அவரது மனைவி நதியா, கணவரை சந்தித்து விட்டு வீடு திரும்பினார்.

அப்போது அவரை வழியில் மிரட்டி, மோட்டார் சைக்கிளில் சிறை வார்டன் மகேந்திரன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மகேந்திரன் வீட்டில் வைத்து நதியாவை துணை ஜெயிலர் தமிழ்ச்செல்வன், சிறை வார்டர்கள் பாலமுருகன், மூர்த்தி ஆகியோர் கற்பழித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதை ஆபாசப் படமாகவும் எடுத்துள்ளனர். வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

பொங்கலுக்கு புத்தாடையுடன் வருவதாக கூறிச் சென்ற நதியா, அதன்படி வராததால் குழப்பமடைந்த கணேசன், தனது மனைவி என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவருக்கு சிறைக் காவலர்களால் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். எனவே அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.டி.தினகரன், ஆர்.ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சிறைக்கு நேரில் சென்று கணேசனிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்றும் அதை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்னர்.

மேலும் சிறைத்துறை கூடுதல் டிஜிபி இதுதொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கடந்த 18ம் தேதி உத்தரவிட்டனர்.

அதன்படி இருவரும் விசாரணை மற்றும் பதில் அறிக்கையைத் தாக்கல் செய்தனர். நேற்று வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறைத்துறை கூடுதல் டிஜிபியின் அறிக்கைக்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில், கூடுதல் டி.ஜி.பி. தாக்கல் செய்த அறிக்கை மீது நாங்கள் திருப்தி அடையவில்லை. கூடுதல் டி.ஜி.பி. விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தோம்.

ஆனால் அந்த உத்தரவின் முக்கியத்துவத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை.ஒரு சிறைக் கைதி தந்த புகாரானது சீருடை பணியாளர்கள் மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இப்படிப்பட்ட புகாரை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. களங்கத்தை நீக்குவது போலீஸ் அதிகாரிகளின் கடமையாகும். இதுபற்றி நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.கூடுதல் டி.ஜி.பி. நேரில் சென்று விசாரணை செய்து, அறிக்கையை தாக்கல் செய்யும்படி கூறியிருந்தோம். ஆனால், சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ராஜசவுந்தரியை விசாரணை நடத்த சொல்லி, அவரது அறிக்கையை பெற்று கூடுதல் டி.ஜி.பி. அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.இந்த அறிக்கை முழுமையாக இல்லை.

இந்த அறிக்கையில் நாங்கள் திருப்தி அடையவில்லை.சிறையில் இருந்த கணவரை பார்த்துவிட்டு வெளியில் திரும்பியபிறகு கற்பழிப்பு சம்பவம் நடந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு கடந்த மாதம் 24ம் தேதி ஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது கணேசன் தனது மனைவிக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து புகார் கூறியுள்ளார். 4 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

புகாரை பெற்ற கூடுதல் டி.ஜி.பி. 7 நாட்கள் கழித்து அதிகாரியை நியமித்து துறைரீதியாக விசாரிக்க மட்டும் உத்தரவிட்டுள்ளார். எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. புகாரின் கடுமையை புரிந்துகொள்ளாமல் துறை ரீதியான விசாரணைக்கு மட்டும் உத்தரவிட்டுள்ளார்.புகார்களுக்கு ஆளான 4 சிறை அதிகாரிகளின் வாக்குமூலம் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பெண்ணை ஆஜர்படுத்துமாறு உள்ளூர் போலீசாருக்கு அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த பிறகும், இந்த விஷயத்தில் எந்தவிதமான, கணிசமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அறிக்கையை பார்க்கும்போது 4 சிறைத்துறை அதிகாரிகளின் விளக்கத்தையும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இந்த கற்பழிப்பு புகாரில் அதிகம் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. பெண் காணாமல் போனதாக மட்டுமே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எனவே, உள்துறை செயலாளர் டி.ஜி.பி.க்கு தக்க உத்தரவை பிறப்பித்து, எஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஒருவரை நியமித்து இந்த புகார் குறித்து விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்.

சரியான முறையில் குற்றப்பதிவு செய்து வேலூர் தாலுகா போலீசார் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு வருகிற 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Thanks : Thatstamil

முஸ்லிம்கள் வெளியேறி ஒர் ஆண்டு நிறைவு


மூதூர் முஸ்லிம் அகதிகள்


இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதுர் கட்டைப்பறிச்சான் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள், அதனையடுத்து மூதூர் நகருக்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.


அதனையடுத்து கடந்த ஒரு வருடத்தில் நிகழ்ந்த மோதல்கள் மற்றும் மக்கள் இடப்பெயர்வுகள் காரணமாக முஸ்லிம் மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ் மக்களும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற நேர்ந்தது.இந்த நிலையில் மூதூர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் முழுமையாக மீளக் குடியேறிவிட்ட போதிலும், தமிழ் மக்களில் கணிசமானோர் இன்னும் இருப்பிடம் திரும்பவில்லை.


ஆயினும் அங்கு தமிழ்- முஸ்லிம் உறவுகள் சீரடைந்துள்ளதாக அப்பகுதி முக்கியஸ்தர்கள் கூறுகிறார்கள்.அங்கு இந்தக் காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட அக்ஷன் பெயிம் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் கொலைக்கான சூத்திரதாரிகள் குறித்த வழக்கு விசாரணைகளும் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.


Thanks : Arinthathai solkiren

அதியமான்கோட்டை போலீசாருக்கு உண்மை கண்டறியும் சோதனை


சென்னை: தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த 8 போலீஸாருக்கு இன்று சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை (Lie detector polygraph test) நடத்தப்பட்டது.

தர்மபுரி அருகே அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு 6 துப்பாக்கிகள் மற்றும் ஒரு வாக்கிடாக்கி ஆகியவை காணாமல் போயின. இதை நக்சலைட்டுகள் கொள்ளையடித்துச் சென்றதாக காவல் நிலைய போலீசார் கூறினர்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் ராஜா, ராஜமாணிக்கம், காவலர் சுப்பிரமணி ஆகியோர் பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் உள்பட 18 பேர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

ஆனால், போலீசார் எதையோ மறைப்பதாக சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். மேலும் காவல் நிலையத்தை ஒட்டிய வயல்களிலும் கிணறுகளிலும் சோதனை நடத்தினர்.

இதில் காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள வாழைத் தோட்டத்தில் அவை புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து 5 துப்பாக்கிகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு துப்பாக்கியின் முனையில் இருந்த கத்தியைக் காணவில்லை. அதேபோல வாக்கி டாக்கியும், இன்னொரு துப்பாக்கியும் சிக்கவில்லை

இந் நிலையில் இச்சம்பவத்தின் பின்னணியில் நக்சலைட்டுகள் இல்லை என்பது உறுதியானது. எனவே அதியமான் கோட்டை காவல் நிலைய போலீஸார் மீதான சந்தேகம் வலுத்துள்ளது

ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் நாடகமாடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேசமயம், கள்ளச்சாராய வியாபாரிகள் அல்லது அரசியல்வாதிகள், ஏதேனும் ஜாதி சங்கத்தினரும் இதன் பின்னணியில் இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு போலீஸார் தவிர காவல் நிலைய டைப்பிஸ்ட் செந்தில்குமார், இன்ஸ்பெக்டரின் டிரைவர் சின்னப் பையன், ரைட்டர் தங்கவேல், காவலர் பார்த்திபன் ஆகியோரும் போலீஸின் சந்தேகப் பார்வையில் விழுந்துள்ளனர்.

இதையடுத்து 8 பேருக்கும் சென்னை அயனாவரம் அருகே உள்ள மனநல மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் ராஜா, ராஜமாணிக்கம், தங்கவேல், பார்த்திபன், காவலர் சுப்பிரமணி, டைபிஸ்ட் செந்தில் குமார், டிரைவர் சின்னப் பையன் ஆகிய அதன்படி 8 பேரும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய பின் இன்று அவர்களுக்கு 'ட்ரூத் சீரம்' (Truth seerum) கொடுக்கப்பட்டு, 'லைடிடெக்டர்கள்' (lie detector) மூலம் மன நல மருத்துவர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தினர்.

ஏற்கனவே இவர்களில் பேருக்கு தர்மபுரி மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்குமார் எச்சரிக்கை:

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கூடுதல் டிஜிபி விஜயக்குமார் கூறுகையில், 5 துப்பாக்கிகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. யார், என்ன காரணத்திற்காக, எந்த நோக்கத் திற்காக இந்த காரியத்தை செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

தவறு செய்தவர்கள் தாமாக முன் வந்து குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல, எச்சரிக்கையும் கூட. குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பொது மக்களும் நல்ல ஒத்துழைப்பும் தகவல்களும் தந்தார்கள். அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

துப்பாக்கிகளை கண்டுபிடித்த காவலர்களுக்கு வெகுமதி கொடுக்கப்பட்டு விட்டது. இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், உதயகுமார் ஆகியோரைக் கொண்ட குழு தான் துப்பாக்கி புதைத்து வைத்து இருக்கும் இடத்தை பார்த்தது.

மிகப்பெரிய தவறு நடந்துள்ளது. தவறு செய்த போலீசார் அவர்களாக வருந்தி, முன்வந்து தகவல் சொல்வது நல்லது. அப்படி வராவிட்டால் நாங்களே கண்டு பிடிப்போம். நிச்சயம் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்.

ஒரு துப்பாக்கியும், வாக்கி டாக்கியும் மீட்கப்பட வேண்டும். ஒரு குண்டூசி கூட விடாமல் அனைத்தும் மீட்கப்பட்டுவிடும் என்றார் அவர்.

Thanks : Thatstamil

நாடு போற போக்க பாத்தா பயமா இருக்குப்பா........

Sunday, February 17, 2008

தர்மபுரி நகஸல் தாக்குதல் நாடகமா?-போலீசார் மீதே சந்தேகம்: துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையில் நக்ஸல்களால் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட துப்பாக்கிகள், காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள வாழைத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு புகுந்த ஒரு கும்பல் அங்கு வைக்கப்பட்டிருந்த 6 துப்பாக்கிகள், வாக்கி டாக்கி ஆகியவற்றை அள்ளிச் சென்றதாக கூறப்பட்டது. அப்போது காவல் பணியில் இருந்த ஒரே காவலர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், மற்றவர்கள் வெளியில் போயிருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்தத் தாக்குதல் நடத்தியது நக்ஸலைட்டுகள் என்று கருதப்பட்டது

இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்ததாக 4 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய 18 பேரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 போலீஸாருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. கூடுதல் டிஜிபி விஜயக்குமாரும் நேரில் போய் விசாரணை நடத்தினார்.

கொள்ளை போன துப்பாக்கிகளும், வாக்கி டாக்கியும் கிணறுகளில் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் கிணறுகளில் சோதனையிட்டனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள வயல் வெளிகளிலும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந் நிலையில் காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள, ரங்கநாதன் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில் வாழை மட்டைகளைக் குவித்துப் போட்டு அதற்குக் கீழே துப்பாக்கிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

காவல் நிலையத்தில் கொள்ளை போனவற்றில் 5 துப்பாக்கிகள் அங்கு கிடந்தன. வாக்கி டாக்கியும், எஸ்.பி.டி.எல். ரக நாட்டுத் துப்பாக்கியும் காணவில்லை. மேலும் சிக்கிய ஐந்து துப்பாக்கிகளில் ஒரு துப்பாக்கியின் முனையில் இருக்கும் கத்தி (பேனட்) காணவில்லை.

துப்பாக்கிகள் கிடைத்த தகவல் கிடைத்ததும் டிஐஜி செண்பகராமன், எஸ்.பி. நஜ்மூல் கோடா உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். கூடுதல் டிஜிபி விஜயக்குமாருக்கும் தகவல் தரப்பட்டுள்ளது. அவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

காவல் நிலையத்திற்குப் பின்பே துப்பாக்கிகள் சிக்கியுள்ளதால் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸார் மீதான சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.

போலீஸார்தான் இதற்குப் பின்னணியில் இருக்க வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது.

போலீஸாருக்குள் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம், அதிகாரிகள் சிலருடன் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். அதற்குப் பழி வாங்கும் வகையில் நகஸல்கள் தாக்குதல் நடத்தியதாக நாடகத்தை நடத்தியிருக்கலாம் என உயர் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதனால் துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவத்தில் நக்சலைட்டுகளுக்கு சம்பந்தம் இல்லை என்றும் போலீஸார் உறுதியாக கூறுகின்றனர்.

காணாமல் போன துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து டிஜிபி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தகவல் முதல்வர் கருணாநிதிக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவர் பாராட்டு தெரிவித்தார். தன்னுடன் வேலூர் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த கூடுதல் டிஜிபி விஜயக்குமாரை அழைத்து உடனடியாக அதியமான் கோட்டை செல்ல உத்தரவிட்டார். அதன்படி விஜயக்குமாரும் அதியமான் கோட்டைக்கு விரைந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், இச்சம்பவத்தில், நக்சலைட் தீவிரவாதிகள் தொடர்பான ஆதாரம் எதுவும் தெரிய வரவில்லை. மேலும் விசாரணையில், இச்சம்பவம் காவல்துறையினரின் மீது களங்கத்தை ஏற்படுத்த காவல் துறையினரால், பாதிக்கப்பட்டவர்கள் செய்திருக்கக் கூடும் எனத் தெரிய வருகிறது.

தனிப்படையினர் காணாமல் போன மற்றொரு துப்பாக்கி மற்றும் வாக்கி டாக்கியை கண்டுபிடிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

Thanks : Thatstamil

Saturday, February 16, 2008

காலால் உதைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை!



நோயா‌ளிகளை‌க் காலா‌ல் உதை‌த்து‌‌க் குண‌ப்படு‌த்து‌ம் ‌வினோதமான ‌சி‌கி‌ச்சையை செ‌‌‌ய்யு‌ம் ஒருவரை‌ உ‌ங்க‌ள் பா‌ர்வை‌க்கு கொ‌ண்டு வரு‌கிறோ‌ம். ச‌த்‌தீ‌ஷ்க‌ர் மா‌நில‌த்‌தி‌ல் உ‌ள்ள ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த் எ‌ன்பவ‌ர் தனது இ‌ந்த‌ச் ‌சி‌கி‌ச்சை‌யி‌ன் மூல‌ம் எ‌ந்த நோயையு‌ம் குண‌ப்படு‌த்த முடியு‌ம் எ‌ன்‌கிறா‌ர்.
இ‌ந்த‌ச் செ‌ய்‌தியை நா‌ங்க‌ள் அ‌றி‌ந்தவுட‌ன், இதுப‌ற்‌றி தெ‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்காக‌ச் ச‌த்‌தீ‌ஷ்கரை நோ‌க்‌கி‌ப் பய‌ணி‌த்தோ‌ம். மா‌நில‌த்‌தி‌ன் தலைநக‌ர் ரா‌ய்‌ப்பூ‌‌ரி‌ல் இரு‌ந்து 75 ‌கி.‌மீ. தொலை‌விலு‌ம், த‌ம்த‌‌ரி நக‌ரி‌ல் இரு‌ந்து 35 ‌கி.‌மீ. தொலை‌விலு‌ம் உ‌ள்ள லேட‌ர் எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌ல்தா‌ன் ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த் இரு‌க்‌கிறா‌ர்.
லேடரை நா‌ங்க‌ள் அடை‌ந்தது‌ம், த‌ங்க‌ள் நோ‌ய்‌க்கு‌ச் ‌சி‌கி‌ச்சை பெறுவத‌ற்காக‌க் குழு‌மி‌யிரு‌ந்த ஆ‌யிர‌க்கண‌க்கான அ‌ப்பா‌வி ம‌க்களை‌க் க‌ண்டோ‌ம். சி‌றிது நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு, ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த் ஒரு மர‌த்‌தி‌ற்கு அடி‌யி‌ல் வ‌ந்து அம‌ர்‌ந்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் ஒ‌‌வ்வொரு நோயா‌ளியாக அழை‌த்து‌க் காலா‌ல் உதை‌த்து‌ம் கையா‌ல் கு‌த்‌தியு‌ம் தனனுடைய ‌சி‌‌கி‌ச்சையை‌த் துவ‌ங்‌கினா‌ர். ‌ம‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்க‌ளி‌ன் முறை‌க்காக ‌நீ‌‌ண்ட வ‌ரிசை‌யி‌ல் கா‌த்‌திரு‌ந்தன‌ர்.
மூ‌ன்று ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்‌பு ‌விவசாய‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்த போது, தா‌ன் க‌ண்ட கன‌வி‌ல் தோ‌ன்‌றிய தெ‌ய்வ‌ம், இ‌ந்த முறை‌யி‌ல் ம‌க்களை கு‌ண‌ப்படு‌த்துமாறு தன‌க்கு அரு‌ளியதாக ம‌ன்சாரா‌ம் ‌‌நிஷா‌த் கூறு‌கிறா‌‌ர். இதை‌விட, தா‌ன் பல ஆ‌ண்டுகளாக எதையு‌ம் சா‌ப்‌பிட‌வி‌ல்லை எ‌ன்று அவ‌ர் கூறுவதுதா‌ன் ‌மிகவு‌ம் ஆ‌ச்ச‌ரிய‌ம் ஆகு‌ம். இதனா‌ல், ஒ‌வ்வொரு கடவு‌ளி‌ன் ச‌க்‌தியு‌ம் தன‌க்கு‌க் ‌கிடை‌ப்பதாக அவ‌ர் கூறு‌கிறா‌ர்
கூடி‌யிரு‌ந்த நோயா‌ளிகளை நா‌ங்க‌ள் ச‌ந்‌தி‌த்தபோது, அவ‌ர்க‌ளி‌ல் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் முத‌ல்முறை வ‌ந்தவ‌ர்க‌ள் எ‌ன்பது தெ‌ரி‌‌ந்தது. அவ‌ர்க‌ள் த‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ளி‌ன் மூல‌ம் ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த்தை‌ப் ப‌ற்‌றி‌க் கே‌ள்‌வி‌ப்ப‌ட்டு வ‌ந்‌திரு‌ந்தன‌ர்.
இத‌ற்‌கிடை‌யி‌ல், ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த்‌தி‌ன் ‌சி‌கி‌ச்சை‌யினா‌‌ல் தா‌ங்க‌ள் குணமடை‌ந்ததாக‌ச் ‌சில‌ர் கூறு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல், அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் அ‌ப்படி‌க் கூறுமாறு சொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்களாகவே தெ‌ரி‌கிறது.
‌நிறைய நோயா‌ளிக‌ள் ‌சி‌கி‌ச்சை‌க்கு வர‌த் துவ‌ங்‌கிய‌தி‌ல் இரு‌ந்து, பு‌திதாக உணவக‌ங்களு‌ம் கடைகளு‌‌ம் இ‌ங்கு பெருக ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டதையு‌ம் எ‌ங்களா‌ல் காண முடி‌ந்தது.
ம‌ன்சாரா‌ம் தனது ‌சி‌கி‌ச்சை அனை‌த்தையு‌ம் க‌ட்டண‌மி‌ன்‌றி இலவசமாக வழ‌ங்குவதாக நோயா‌ளிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர். ஆனா‌ல், ம‌க்க‌ள் கா‌ணி‌க்கையாக பண‌த்தையு‌‌ம் பொரு‌ட்களையு‌ம் அ‌ளி‌க்‌கி‌ன்றன‌ர். ஒ‌வ்வொரு நோயா‌ளியு‌ம் த‌ங்க‌ள் ‌சி‌‌‌கி‌ச்சை‌க்காக மூ‌ன்று முறை வரவே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த் கூறு‌கிறா‌ர். மூ‌ன்று முறையு‌ம் கா‌ணி‌க்கை தர‌ப்படு‌கிறது.
அ‌ங்கே கூடி‌யிரு‌ந்த நோயா‌ளிக‌ளி‌ல் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் படி‌க்காதவ‌ர்களாகவு‌ம், ஏழைகளாகவு‌ம் மரு‌த்துவ வச‌திகளை‌ப் ப‌ற்‌றி அ‌றியாதவ‌ர்களாக‌வு‌ம் இரு‌ந்தன‌ர். இதனா‌ல், அவ‌ர்க‌ள் ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த்தை ந‌ம்பு‌கி‌ன்றன‌ர் எ‌ன்பதை நா‌ங்க‌ள் க‌ண்டோ‌ம்.

Nantri : Satrumun

அரசுநிலத்தை ஆக்கிரமித்த விஜயகாந்த்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ‘கேப்டன் பண்ணை’ என்ற நிலம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது. அதை மீட்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சம்பந்தப்பட்ட ஊர் பஞ்சாயத்துத் தலைவி புகார் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான பண்ணையான கேப்டன் பண்ணை, மதுராந்தகம் அருகே உள்ள விளாகம், அருங்குணம், முள்ளிமுருக்கஞ்சேரி, தேவாதூர் ஆகிய கிராமங்களில், கிட்டத்தட்ட 402.24 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
இதில் பெருமளவில் அரசு நிலத்தை விஜயகாந்த் ஆக்கிரமித்து விட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் சட்டவிரோதமாக மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கிளம்பியது.
இந் நிலையில், தேவாதூர் கிராம பஞ்சாயத்துத் தலைவி மீனா ஜெயராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் கே. மிஸ்ராவைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், விஜயகாந்த்தின் கேப்டன் பண்ணையில், 363.62 ஏக்கர் நிலம் மட்டுமே அவருக்குச் சொந்தமானதாகும். மீதியுள்ள 38.62 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பட்ட நிலமாகும்.
இதில் அரசு புறம்போக்கு நிலம் 26.52 ஏக்கராகும். கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலம் 4.01 ஏக்கராகும். மேலும் பன்னீர் செல்வம் என்பவருக்குச் சொந்தமான 8.09 ஏக்கர் நிலத்தையும் வளைத்து மொத்தமாக மின் வேலி போட்டுள்ளனர்.
இந்த மின்வேலியைத் தாண்டிச் செல்ல முயலும் ஆடு, மாடுகள் போன்றவை பரிதாபமாக செத்து மடிகின்றன. எனவே அந்த மின்வேலியை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் கூறியுள்ளார் மீனா.

Nantri : Satrumun

Thursday, February 14, 2008

டென்மார்க்கில் மீண்டும் முகமது (ஸல்) கார்ட்டூன் பதிப்பு

டென்மார்க்கில் மீண்டும் முகமது (ஸல்) கார்ட்டூன் பதிப்பு
Danish Muhammad cartoon reprinted The row saw Danish flags being burnt in Muslim statesDanish newspapers have reprinted one of several caricatures of the Prophet Muhammad which sparked violent protests across the Muslim world in 2005.
They say they wanted to show their commitment to freedom of speech after an alleged plot to kill one of the cartoonists behind the drawings.Of three suspects detained over the alleged plot on Tuesday, one - a Danish citizen - was released on Wednesday.The remaining two - Tunisian citizens - are set to be deported without trial.The cartoons were originally published by Jyllands-Posten in September 2005.Danish embassies were attacked around the world and dozens died in riots that followed.
Papers defiant
Jyllands-Posten and many other major newspapers, including Politiken and Berlingske Tidende, reprinted the caricature in their Wednesday editions.
Kurt WestergaardCartoonist
The cartoon depicts Muhammad wearing a turban shaped like a bomb with a lit fuse.The editors said no-one should feel their life was threatened because of a drawing.
"We are doing this to document what is at stake in this case, and to unambiguously back and support the freedom of speech that we as a newspaper will always defend," Berlingske Tidende said.The cartoon was also broadcast on national television, and even newspapers that were originally against the publication of the caricatures are now backing the campaign to defend freedom of speech, says the BBC's Thomas Buch-Andersen in Copenhagen.No strong reactions to the republication had been observed, a foreign ministry official told news agency AP.Expulsions criticisedOn Tuesday, the head of the Danish Security and Intelligence Service (Pet), Jakob Sharf, said its operatives had carried out pre-dawn raids in the Aarhus region.The three suspects - two Tunisians and a Dane of Moroccan origin - had been detained "after lengthy surveillance", he added.The Danish citizen was released pending further investigation, while the Tunisians will be held until they are expelled from the country.But lawyers and Muslim groups criticised the decision to deport the men without giving them a chance to defend themselves in court.Franz Wenzel, the lawyer for one of the men, told Danish TV that the fact that the Danish citizen had been released "for lack of evidence" while two foreigners were being expelled was "incomprehensible", AFP news agency reported.Meanwhile, Kasem Ahmed of the Islamic Faith Society in Denmark, condemned the alleged murder plot - but also criticised the newspapers' decision to republish the cartoons, saying they remained an insult to Muslims.Police protectionThe Pet did not identify the target of the alleged plot, but the online edition of Jyllands-Posten said its cartoonist, Kurt Westergaard, was the focus.The newspaper, based in Aarhus, said Mr Westergaard, 73, and his 66-year-old wife, Gitte, had been under police protection for the past three months.In a statement on Jyllands-Posten's website, Mr Westergaard said: "Of course I fear for my life when the police intelligence service say that some people have concrete plans to kill me."But I have turned fear into anger and resentment."

Thanks:BBC.News

இதயம் படபடக்க வைக்கும் இந்த செயல் இஸ்லாமியர்களே நீங்கள் பெற வேண்டிய எழுச்சியின் தேவையை எடுத்துரைக்கிறது.இந்த செயலை செய்தவனுக்கு எங்கள் இதயத்தின் வலியோடு ஒரு கேள்வி.உன்னுடைய தாயாரை இந்த ஊரில் எல்லோரும் நிர்வாணமாக பார்த்து செல்வது உனக்கு வேதனை அளிக்கக் கூடியது தானே ? அதைவிடவும் ஆயிரம் ஆயிரம் மடங்கு எங்கள் இதயம் வேதனைப் படுகிறது.இதற்க்கு நீ நியாயம் கர்ப்பிக்க வேண்டி உன்னுடைய நய வஞ்சக நாடு கூறும் போலியான கருத்தை எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் இன்னும் மனித நேயம் உள்ள எந்த ஒரு மனிதனும் ஏற்கவும் மாட்டன் மன்னிக்கவும் மாட்டான்.உங்களில் எவராவது ஒருவரை உங்கள் சொந்தப் பகையின் காரணமாக எவனாவது கொலை செய்ய வந்தால் உடனே அதற்கும் ஒரு மத சாயம் பூசி அதில் ஒவ்வொரு முஸ்லிம்களிம் உயிருக்கும் மேலான முகம்மது நபி (ஸல்) அவர்களை களங்கப் படுத்தவேண்டிய அவசியம் என்ன.உங்கள் பொய்யின் அடிப்படியில் நீங்கள் அந்த இருவரை கைது செய்து இருந்தால் அதற்கு அவர்களிடம் விசாரித்து உண்மையை கண்டறிவதை விட்டு விட்டு இப்படி சொந்த தாயை கூட்டிக் குடுப்பதை விட கேவலமான ஒரு காரியத்தை செய்ததன் மூலம் நீங்கள் மனித நேயத்தை அழித்ததை விட வேறு எதை சாதித்து விட்டீர்கள்.உண்மையிலே கடவுளை நேசிக்க கூடிய அலல்து கடவுளை புரிந்து நன்றி செலுத்தவும் அதற்காக எங்களைப் பணித்த எங்கள் உயரினும் மேலான மாநபி களை நேசிக்கும் எங்களுக்கு இனி மரணம் வரை உங்கள் நாட்டின் எதுவும் தேவை இல்லை ஒரு வேளை உங்கள் நாட்டுப் பொருட்களை தின்று தான் உயிர் வாழ வேண்டும் என்ற சூழ்நிலை வந்தாலும் நாங்கள் செத்து மடிந்தாலும் மடிவோமே தவிர அப்படி ஒரு இழுக்கை நோக்கி போக மாட்டோம்.அது நீங்கள் போலியாக எப்போதும் கேட்க்கும் மன்னிப்பை இன்னுமொருமுறை கேட்டாலும் கூட இனி எங்கள் நிலைப் பாடில் மாற்றம் இல்லை .கண்ணியம் பொருந்திய என் இஸ்லாமிய சமூகமே எல்லா உயிரும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும் .நமக்கும் மரணம் நிச்சயமே.அந்த மரணத்திற்கு பிறகு ஒரு அழகான மறுமை வாழ்வும் நிச்சயமே.அந்த மறுமை வாழ்வு அழகாக வேண்டுமானால் அதற்காக நமக்கு பரிந்துரை செய்ய சக்தி படைத்த ஒரே ஒரு மனிதர் உள்ளார் அவர் தாம் நாம் உயரினும் மேலாக மதிக்கும் மனிதருள் மாணிக்கம் அண்ணல் எம்பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்கள்.அவர்களுக்கு ஒரு இழுக்கு நேர்ந்தும் அதை கண்டும் காணாத சமுதாயமாய் நாம் இருப்போமானால் நாளை மஹுசர் மைதானத்தில் கைசேதப் பட்டவர்களாக மட்டுமே இருக்கவேண்டிய ஒரு சூழல் வரும் அதனை விட்டும் அல்லா நம்மைப் பாது காப்பனாக. இது போன்ற ஒரு ஈனசெயலை இனி ஒரு முறை எவனும் கனவிலும் செய்ய நினைக்காத வண்ணம் நம் எதிர்ப்புகளை துஆக்களாலும் இன்னும் இவர்களுக்கு பொருளாதாரம் முதல் மனித நேயம் கொண்டு செய்யும் அத்தனை உதவிகளையும் நிறுத்துவதாலும் நம்முடைய முழுமையான எதிப்பை தெரிவிப்போம்.இன்னும் இவர்களுக்கு மிசக் சிறந்த ஒரு பாடம் கற்பிப்போம்.அதற்கு அந்த வல்ல அல்லா நமக்கு அருள் புரிவானாக

நன்றி : arinthathai solkiren

Tuesday, February 12, 2008

முஸ்லிம் வேட்டை, நீதிமன்றங்களில் ஆதாரமின்றித் திணறும் கேரளக் காவல்துறை.

முஸ்லிம் வேட்டை, நீதிமன்றங்களில் ஆதாரமின்றித் திணறும் கேரளக் காவல்துறை.

திங்கள், 11 பெப்ரவரி 2008

தீவிரவாதி எனக் கூறி முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடிய வழக்குகளில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காமல் காவல்துறை நீதிமன்றங்களில் திணறுகின்றது. கடந்த 12 ஆண்டுகளுக்கிடையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக ஊதிப் பெரிதாக்கியத் தீவிரவாத வழக்குகள் அனைத்திலும் காவல்துறையும் அரசு வழக்கறிஞர்களும் ஆதாரங்கள் இல்லாமல் நீதிமன்றச் சாட்சிக் கூண்டில் திணறுகின்றனர்.கேரளாவில் கடந்த 1996 பிப்ரவரியிலிருந்து 2006 ஆகஸ்ட் வரையிலான 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் 27 முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதம், தேச விரோதம் போன்றக் குற்றங்கள் சுமத்திக் காவல்துறை கைது செய்துச் சிறையிலடைத்தது. இந்த இளைஞர்கள் அனைவரும் பல்வேறு வழக்குகளில் மொத்தம் 236 நாட்கள் ரிமாண்டில் இருந்தனர். பிணை கூடக் கிடைக்காத கடுமையான சட்டப்பிரிவுகள் மூலம் சிறையிலடைக்கப்பட்ட எந்த ஒரு வழக்கிலும் இந்த இளைஞர்களுக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் ஒன்று கூடக் காவல்துறையினால் இதுவரை கண்டுபிடிக்கவோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவோ முடியவில்லை.கேரள முன்னாள் முதல்வர் மறைந்த E.K.நாயனார் கொலை முயற்சி, குமன்கல்லு குழாய் வெடிகுண்டு வழக்கு, கடைக்கல் குண்டுவெடிப்பு, பானாயிகுளம் சிமி வேட்டை, அஞ்சல் வெடிகுண்டு (Letter bomb) துவங்கி ஊடகங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகப் புனையப்பட்டு நிறைந்து நின்றப் பல வழக்குகளிலும் அவற்றைத் துவங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் கூட இதுவரை எடுக்கப்படாமல் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. ஒரு சிறு ஆதாரம் கூடக் கிடைக்காமல் இவ்வழக்குகளின் விசாரணைகள் பாதியிலேயே நிற்கும் வேளையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைத் தற்பொழுது காவல்துறை தேட ஆரம்பித்துள்ளது.1996 -ல் பதிவு செய்யப்பட்ட குமன்கல்லு குழாய் வெடிகுண்டு வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டக் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்ட ஆதாரங்கள் எதுவுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாதக் காரணத்தால் மலப்புரம் நீதிமன்றம் காவல்துறையை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தது.பொன்னானி வெளியங்கோட்டைச் சேர்ந்த P.K.M. முஹம்மது ஷரீப் முதலான 5 முஸ்லிம் இளைஞர்கள் குற்றம் சுமத்தப்பட்ட இவ்வழக்கில் இவர்கள்,"ஈரானிலிருந்து ஆயுதப் பரிசீலனைப் பெற்றவர்கள் எனவும் பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டு முதலானப் பயங்கர ஆயுதங்கள் இந்தியாவுக்குக் கடத்தியதாகவும்" காவல்துறை குற்றம் சுமத்தி இருந்தது.ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வெறுமனே குற்றச்சாட்டுகளை வாரி வீசியிருந்த அன்றைய மலப்புரம் வட்ட ஆய்வாளரின் (Circle Inspector) குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தது. "காவல்துறையின் பணி கதைகள் உருவாக்குவதல்ல" என நீதிமன்றம் அன்று கண்டித்தது. விசாரணை நிறைவடையவில்லை என்ற காவல்துறையின் நிலைப்பாடு காரணத்தால் இவ்வழக்கு 12 வருடங்கள் கடந்த பின்னரும் இன்றும் நீண்டுக் கொண்டே இருக்கின்றது.8 முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக 1999 டிசம்பர் 12 அன்று கண்ணூர் நகர மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட E.K.நாயனார் கொலை முயற்சி வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர் கடந்த 8 வருடங்களாக நீதிமன்றத்தில் சாட்சியளிக்காமல் போக்குகாட்டிக் கொண்டிருக்கின்றார். அப்துல் நாசர் மஹ்தனி தலைமையிலான PDP-யைச் சேர்ந்த இவர்கள் கண்ணூரிலுள்ள பள்ளிக்குன்று என்னுமிடத்தில் ஒன்றுகூடி அன்றைய முதலமைச்சராக இருந்த E.K. நாயனாரைக் கொலை செய்வதற்காகத் திட்டம் தீட்டினர் என்பதே வழக்கு. வழக்கில் தொடர்புடைய ஒரு நபர் தலைமறைவானதால் விசாரணையைப் பூர்த்தி செய்ய இயலவில்லை எனக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.அந்த ஒரு நபரை மட்டும் தனியாக மாற்றி வழக்கைப் பிரித்து நடவடிக்கைகளை உடனடியாக முடிக்க வேண்டும் என மூன்று மாதம் முன்பு கண்ணூர் இரண்டாம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். எனினும் இதுவரை காவல்துறை அவ்வுத்தரவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எதையுமே இதுவரை ஆரம்பிக்கவில்லை.2006 ஆகஸ்டு 15 அன்று தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி ஆலுவாவிலுள்ள பானாயிகுளத்தில் 5 முஸ்லிம் இளைஞர்களைக் காவல்துறை கைது செய்து சிறையிலடைத்தது. இவ்வழக்கிலும் இன்றுவரை காவல்துறை நீதிமன்றத்தில் முறையான எந்த ஓர் ஆவணமும் தாக்கல் செய்யவில்லை. தீவிரவாதிகள் எனக்கூறி இவர்களைக் கைது செய்தக் காவல்துறை மொத்தம் 65 நாட்கள் அநியாயமாகச் சிறையிலடைத்திருந்தது. இவ்வழக்கில் பிரத்தியேக விசாரணைக் குழுவிற்குப் பானாயிகுளத்தில் உள்ள ஹிரா லைப்ரரியில் இருந்து ஒரு புத்தகம் அல்லாமல் வேறொன்றும் இதுவரை ஆதாரமாகக் கிடைக்கவில்லை.முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் சமர்ப்பிக்கப்படாததால் இரு மாதங்களுக்குப் பின் நீதிமன்றம் இவர்களுக்குப் பிணை வழங்கியது. கடந்த இரு வருடங்களாக விசாரணை முடியவில்லை என்றக் காரணம் கூறி காவல்துறை இவ்வழக்கை இன்றுவரை நீட்டித்துக் கொண்டே செல்கின்றது.2006 அக்டோபரில் கொல்லம் கடைக்கலில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டதாகக் கூறி கேம்பஸ்ஃப்ரண்டைச் சேர்ந்த 5 மாணவர்களைக் கைது செய்து சிறையிலடைத்த வழக்கிலும் காவல்துறைக்கு இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இவ்வழக்கில் 6 ஆம் எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்த மாணவன் ஷராபத் 6 நாட்களும் மற்ற நான்கு மாணவர்களும் மூன்று வாரமும் காவலில் சிறையில் இருந்தனர்.DYFI-யின் நெருக்குதல் மூலம் இந்த 5 முஸ்லிம் மாணவர்கள் மீது தீவிரவாதக் குற்றம் சுமத்திக் காவல்துறை பொய்வழக்கு சுமத்தியதாகும்.இவ்வழக்கும் விசாரணை முழுமையடையவில்லை என்றக் காரணம் கூறி நீட்டிக்கப்படுகின்றது.2006 செப்டம்பர் 21 அன்று குடியரசுத் தலைவரின் கேரளச் சுற்றுப்பயண வேளையில் அஞ்சல் வெடிகுண்டு தொடர்பாகத் தீவிரவாதி எனக் காவல்துறைக் கண்டுபிடித்த திருவனந்தபுரம் மணக்காடைச் சேர்ந்த முஹ்ஸின் என்ற மாணவன், உண்மையான குற்றவாளி பிடிக்கப்பட்டுக் குற்றமற்றவர் எனத் தெளிவான பின்னரும் காவல்துறை இதுவரை முஹ்ஸினுக்கு எதிராகப் பதிவு செய்த வழக்கைத் திரும்பப்பெறவில்லை.களக்கூட்டத்திலுள்ள மேனன்குளம் என்ற இடத்தைச் சேர்ந்த ராஜீவ் ஷர்மா எனும் நபர் தான் அஞ்சல் வெடிகுண்டு தயார் செய்து அதன் பின்னால் செயல்பட்டவர் எனப் பின்னர் விசாரணையில கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.இவையல்லாமல் காவல்துறையும் ஊடகங்களும் இணைந்து உருவாக்கப்பட்டத் தீவிரவாதக் கதைகளின் பெயரில் கடந்த 12 வருட காலத்தில் கேரளத்தில் வேட்டையாடப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 2000 க்கும் அதிகமாகும்.பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இத்தகையத் தீவிரவாத வழக்குகளில் ஒன்று கூட இதுவரை நிரூபிக்கப்படவில்லை. என்றாலும் தீவிரவாதம், பயங்கரவாதம் எனக் கூறி முஸ்லிம் இளைஞர்களைச் சிறையிலடைக்கும் செயல்பாட்டைக் கேரள காவல்துறை இன்றும் தொடர்கிறது. இதில் நேற்று காஸர்கோட்டில் தீவிரவாதிகள் எனக் கூறி கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்கள் காவல்துறையின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளின் புதிய இரைகள் என்றச் சந்தேகம் வலுபெறவே செய்கின்றது.

நன்றி : அறிந்ததை சொல்கிறேன்

நன்றி: P.C. அப்துல்லாஹ்.(தேஜஸ் நாளிதழ் 11.02.2008.)

கோத்ரா ரெயில் எரிப்பு பற்றி மீண்டும் விசாரணை: நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி!

கோத்ரா ரெயில் எரிப்பு பற்றி மீண்டும் விசாரணை: நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி!
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் பற்றி மீண்டும் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட் டன.
இதனால் இரு சபை களும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ரெயில்வே பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மந்திரி லல்லு பிரசாத் பதில் அளித்து பேசினார்.
அப்போது 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த ரெயில் எரிப்பு சம்பவத் தில் 59 பேர் பலியானது பற்றி மீண்டும் உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக கூறினார்.
3 மாத காலத்திற்குள் இந்த விசாரணை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள் ளது. நேற்று பாராளுமன்றம் கூடி யதும் பாரதீய ஜனதா உறுப் பினர் வி.கே. மல்கோத்ரா எழுந்து இந்தப் பிரச்;சினையை கிளப்பினார்.
ரெயில்வே பட்ஜெட் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய லல்லு பிரசாத் ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்து உள்ளார். கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் பற்றி குஜராத் மாநில அரசு விசா ரணை நடத்தி வரும் நிலையில் அதுகுறித்து மீண்டும் ஒரு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறி னார்.
இதைத் தொடர்ந்து பாரதீய ஜனதா மற்றும் சிவசேனா உறுப்பினர்கள் சபையின் மையப் பகுதிக்கு சென்று, ஹஹலல்லுவை மந்திரி பதவியில் இருந்து நீக்குங் கள், நாட்டை காப்பாற்றுங்கள்" என்று கோஷம் எழுப்பினார்கள்.
பதிலுக்கு ஆளும் கட்சி உறுப் பினர்கள், ஹஹநரேந்திர மோடியை (குஜராத் முதல்-மந்திரி) பதவி நீக்கம் செய்து நாட்டை காப் பாற்றுங்கள்" என்று கோஷம் போட்டனர்.
இருதரப்பினரும் இவ்வாறு கோஷம் போட்டதற்கு சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜி கண் டனம் தெரிவித்தார். ஹஹபாராளு மன்றத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை நாடு பார்த்துக் கொண்டுதான் இருக் கிறது" என்று கூறினார்.
அப்போது ராஷ்டிரீய ஜனதா தள உறுப்பினர் ராம் கிருபால் வர்மா கோஷம் எழுப்பியபடி சபையின் மையப் பகுதியை நோக்கி வரவே அவரை சபா நாயகர் எச்;சரித்தார்.
என்றாலும் தொடர்ந்து அமளி நீடித்ததால் பகல் 12 மணிவரை சபையை ஒத்திவைத்தார்.
பின்னர் 12 மணிக்கு சபை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் அமளியில் ஈடுபட்ட தால் பிற்பகல் 2 மணிவரை சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
2 மணிக்கு சபை கூடியதும் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் குறித்து பேசுமாறு முன்னாள் ரெயில்வே மந்திரியான நிதிஷ் குமாரை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கேட்டுக் கொண்டார். அப்போது சிவசேனா உறுப் பினர் ஆனந்த் கீதே குறுக்கிட்டு, ஹஹகோத்ரா சம்பவத்துக்கும் ரெயில்வே பட்ஜெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.
இதற்கு ஆளும் கட்சி உறுப் பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த தால் அமளி ஏற்பட்டது. இத னால் பிற்பகல் 3 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
3 மணிக்கு சபை கூடியபோது கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத் துக்கும் ரெயில்வே பட்ஜெட்டுக் கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் ரெயில்வே மந்திரி நிதிஷ்குமார் கூறினார். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர் கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களை அமைதிப் படுத்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மேற்கொண்ட முயற்சி கள் பலன் அளிக்கவில்லை.
இதனால் அவர் நேற்று முழு வதும் சபையை ஒத்திவைத்தார்.
இதேபோல் மாநிலங்களவையிலும் இந்தப் பிரச்;சினை தொடர்பாக அமளி ஏற்பட்டது.
மாநிலங்களவை கூடியதும் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் எழுந்து கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பது கலவரத் துக்கு வழிவகுக்கும் என்றும் எனவே இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். அத் துடன் சபையின் மையப் பகுதிக்கு சென்று லல்லு பிரசாத்துக்கு எதிராக கோஷம் போட்டனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு இந்தப் பிரச்;சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தி னார்கள்.
பதிலுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கேள்வி - பதில் நேரத்தை எடுத் துக் கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள்.
இதனால் அமளி ஏற்பட்ட தால் மேல்-சபை தலைவர் செகாவத் பகல் 12 மணிவரை சபையை ஒத்திவைத்தார்.
12 மணிக்கு சபை கூடிய போதும் எதிர்க்கட்சி உறுப்பினர் கள் கோஷங்களை எழுப்பியதால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பிற்பகல் 2 மணிவரை சபை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் 2 மணிக்கு சபை கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் நேற்று முழுவதும் சபை ஒத்திவைப்பட்டது.
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் குறித்து மீண்டும் விசா ரணை நடத்த உத்தரவிடப் பட்டதால் ஏற்பட்ட அமளியின் காரணமாக நேற்று பாராளுமன் றத்தின் இரு சபைகளிலும் எந்த நடவடிக்கையுமறீ மேற்கொள்ளப் படவில்லை.

நன்றி : தமிழ் மணம்

Monday, February 11, 2008

இன்றைய மனிதனுடைய ஜீவிதம் ஒரு சிறைவாசகமாக இருந்து வருகிறது...

ஒரு அழகான ஆறு உயிர்த்துடிப்புடன் சலசலவென்று பலமாக சிரித்துக் கொண்டு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. புதிய இடங்களைப் பார்க்க வேண்டும். புதிய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். சிறிய கிராமங்களையும் பார்க்க வேண்டும். மலைப் பிரதேசங்களில் இருக்கும் அழகை ரசிக்க வேண்டும். பசுமையான நெற்பயிர்கள் அங்கு வீசிக் கொண்டிருக்கும் காற்றில் உந்தப்பட்டு ஆடும் நடனத்தைக் கண்டுகளிக்க வேண்டும் என்று அந்த ஆறு பலவிதமான ஆசைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.அந்த ஆறு தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பாய்ந்து முன் சென்று கொண்டிருக்கிறது. அந்த ஆறு தான் செல்லவிருக்கும் புதிய இடங்களில் என்னமாதிரியான அபாயங்களைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என்று நினைத்து கலங்கவில்லை. புதுமைகளைச் சந்திக்கும் ஆசையில் இடையில் எதிர்படும் எதிர்ப்புகளைக் கண்டு அது சிறிதும் பயப்படவில்லை. மலை உச்சிகளிலிருந்து அது நீர் வீழ்ச்சிகளாக கீழே சீறிப்பாய்ந்து முன் சென்றது. அது செல்லும் வழியில் வாழ்ந்து வரும் மனிதர்களின் தாகத்தைத் தீர்த்து உதவியது.அந்த ஆற்றில் இரு பக்கங்களிலும் இருந்த நிலங்களில் வளர்ந்து வரும் பலவிதமான பயிர்களுக்கு தேவையான நீரை அது கொடுத்தது. அதன் மீது மக்கள் படகுகளில் மிதந்து மகிழ்ந்து வந்தார்கள். அந்த ஆற்று நீரில் மீன்கள் துள்ளி விளையாடின. சிறிதுகூட சோம்பேறித்தனம் இல்லாமல் அது தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருந்தது. அதற்கு கலக்கமோ அல்லது குழப்பமோ சிறிதுகூட இல்லை. அதற்கு அனைத்து நேரமும் கொண்டாடட்டம் தான். ஒரு குதூகலம் தான்.அந்த விசாலமான ஆற்றின் ஒரு ஓரத்தில் ஒரு பள்ளம் இருந்தது. வெள்ளப் பெருக்கின் போது அந்த பள்ளம் முழுவதிலும் ஆற்றுநீர் நிறைந்து விட்டிருக்கிறது. அந்த பள்ளத்தில் நீர் எந்தவிதமான சலனமும் இல்லாமல் தேங்கி நின்றது. சில நாட்களுக்குப் பிறகு அந்த நீரில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. அது ஒரு சிறிய குட்டையைப் போன்று காட்சி தர ஆரம்பித்தது. அந்த நீரில் மீன்கள் துள்ளி விளையாடவில்லை. அந்த நீரில் எந்தவிதமான உயிர்த்துடிப்பும் காணப்படவில்லை. அந்தக் குட்டையைப் பார்க்கும் போது அருவருப்புத் தான் ஏற்பட்டது.மனிதர்களாகிய நாம் உயிர்த்துடிப்புடன் முன் சென்று கொண்டிருக்கும் மனித வாழ்க்கை என்ற ஆற்றுடன் நம்மை இணைத்துக் கொண்டு முன் செல்லாமல் அதிலிருந்து தூரமாக விலகிச் சென்று நமக்கு நாமே தனியாக ஒரு குட்டையை உருவாக்கிக் கொண்டு அதில் நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் - ஆசைகள், பயங்கள், பொறாமைகள், வெறுப்புகள், ஏக்கங்கள், குழப்பங்கள், கலாச்சாரங்கள், கடவுள்கள், மதங்கள், பூஜை, வழிபாடுகள், மரபுகள், கோட்பாடுகள், சடங்குகள், மூடநம்பிக்கைகள், நாடுகள், கொடிகள், அரசியல், கொள்கைகள், இனங்கள், ஜாதிகள் போன்றவற்றை இறுகப்பற்றிக் கொண்டு - சாரமற்ற அருவருக்கத்தக்க அவலமான வேதனை நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.நாம் அனைவரும் பாதுகாப்பை விரும்புகிறோம். நிலைத்து நிற்கும் வாழ்க்கையில் தான் நமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். நாம் செய்துவரும் அதே வேலையில் தான் பாதுகாப்பு இருப்பதாக நினைக்கின்றோம். நமக்குத் தெரிந்தவர்களுடன் வாழ்ந்து வரும் போது தான் நமக்கு பாதுகாப்பு கிட்டும் என்று கருதுகிறோம். புதிய இடங்களை நாடிசெல்வதனால் மோசமான வாழ்க்கை அமைந்துவிடுமோ என்று அஞ்சுகின்றோம். புதிய இடங்களில் வாழ்ந்து வருபவர்கள் நமக்கு உதவி செய்யமாட்டார்கள் என்று பயப்படுகிறோம்.ஆகையால் நாம் மாற்றம் இல்லாத நிலையான (Permanency) வாழ்க்கையை விரும்புகிறோம். வாழ்க்கை என்ற ஆற்று நீரோடு நம்மை இணைத்துக் கொண்டால் நாம் நிறைய மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் பாசி படர்ந்த துர்நாற்றம் வீசும் அசுத்தம் நிறைந்த குட்டை நீரில் நாம் வாழ்ந்து வந்தால் எந்த ஒரு புதிய மாற்றத்தையும் நாம் சந்திக்க வேண்டியிருக்காது. மாற்றங்கள் இருந்தால் தான் அபாயங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பயந்து மாற்றம் எதுவும் இல்லாத குட்டை நீரைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.இப்படிப்பட்ட மனநிலையுடன் வாழ்ந்த வரும் தனிதர்கள் தங்களுடைய நாடு மதம் இனம் ஜாதி கட்சி போன்றவை தங்களுக்கு பாதுகாப்பு தரும் என்று நம்புகிறார்கள். தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் போது தங்களுடைய நாடு, மதம், இனம், ஜாதி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஓடிவந்து தங்களுக்கு உதவி செயவார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் நாடு, மதம், கட்சி போன்றவை மனித இனத்தை பல பிரிவுகளாகப் பிரித்து அவற்றுக்கிடையே போட்டி, பொறாமை, சந்தேகம், வெறி, மிருக்கதனம் போன்றவற்றை வளர்த்து வருகின்றன.தத்துவஞானி ஜே.கே. கிருஷ்ணமூர்த்தி

''மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது...

''மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, கோயிலுக்குள் போகக்கூடாது, குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோவிட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரிக் கொடுமைப்படுத்தித் தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும் அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ? இம் மாதிரியான மக்கள் இன்றும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதை விட அவர்கள் இம் முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா?''