Monday, March 16, 2009

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!

கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது!!விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.






மேற்கொண்டு படியுங்கள்.
1. அது பெண்பால்.
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது.
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?
إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا
நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)
இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா?
இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான்.
இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)
அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவேர் அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன். இதில் நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம்.
அதற்கு விடையாக,
படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும்,
படம்-2 . A. முகத் தோற்றத்தையும்,
B அதன் நுண்ணிய கண்களையும்,
C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம்.
ஸுப்ஹானல்லாஹ் ! அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

ஆதாரம்: அல்மஃரிபீ பில்குர்ஆனில் கரீம்.காம்,
http://www.vp.rghh.com/

ஒட்டகம் - உட்புறத்தின் இறைவனின் மெகா செட்டப்

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لِّأُوْلِي الألْبَابِ

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. 3:190.


ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !


ஒட்டகம் ஓர் உயிர் பிராணி என்பதால் தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா ? நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நாது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா ? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

அப்படியே உட்கார்ந்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
ஒட்டகம் என்ன ?
மனிதனுடைய நிலையே அது தான் !

மனிதனுக்குப் பசியும் தாகமும் ஏற்பட்டு விட்டால் தனது அடுத்த வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு முதலில் பசியையும், தாகத்தையும் முடித்துக் கொள்வான் இல்லை என்றால் மொத்த இயக்கமும் நின்று விடும் மற்ற அனைத்து உயிரிணங்களுடைய நிலையும் இது தான்.

இதே நிலை ஒட்டகத்திற்கும் ஏற்பட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ? ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்று இறைவன் கூறுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும் ( நவூது பில்லாஹ் - அல்லாஹ் நம்மை காக்க வேண்டும் )

அல்லது ஒட்டகம் வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீரை கக்கி மீண்டும் குடிக்க முடியுமா ?
அவ்வாறு கக்குவதாக இருந்தால் கக்கிய அனைத்து நீரையும் அசுர வேகத்தில் வறண்ட பூமி உறிஞ்சி விடும்.

எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் அதற்கான ஏற்பாடு ஒன்றையும் அதனுடைய உடலின் உட்புறத்திலேயே அமைத்து வைத்தான்.

ஒட்டகம் நீரை பம்பிங் செய்து கொண்டப் பொழுது அதில் குறிப்பிட்ட அளவு தன்னீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் உறிஞ்சிக் கொள்வதைப் போல் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஒட்டகத்தின் திமிலுக்கு செல்கிறது திமிலுக்குச் சென்றதும் அது கொழுப்பாக மாறுகிறது ( அதனுடைய திமில் சுமார் 45 kg எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) உணவோ> நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதற்கு தாகமும் பசியும் ஏற்பட்டால் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.

நமது புதிய இல்லத்திற்கு பால்கனியில் வாட்டர் டாங்க் அமைப்பது போல் ஒட்டகத்தின் உடலின் மேல்மட்டத்தின் மையப்பகுதியில் திமிலை இறைவன் அமைத்தான் அதனால் ஒட்டகத்தின் மூளை அதற்கு பசியையும் தாகத்தையும் தூண்டியதும் அசுர வேகத்தில் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றியதும் உணவையும், நீரையும் இழுத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்து பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய ‘வேகஸ்’ நரம்புகள் தனது வேலையை சுறு சுறுப்பாகச் செய்து ஒட்டகத்தின் தாகத்தையும், பசியையும் கட்டுப்படுத்தி விடுகிறது.

வேகஸ் நரம்புகளின் பணிகளில் சில: இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல் வேறு பகுதிகளில் நகர்வதற்குத் துணை செய்யும் சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல தசைகளை இயக்குவது, பேசுவதற்குத் துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது, மண்டை ஓட்டின் தசைகள் சிலவற்றைக் கட்டுறுத்துவது, பெருங்குடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்துவது என்று பல பணிகளைக் கட்டுறுத்தும் நரம்புகள் ஆகும் . வேகஸ் நரம்பு - தமிழ் விக்கிபீடியா

இது சாத்தியப்படுமா ?

வாய் வழியாக அருந்தி நாக்கு அதனுடைய சுவையை உணர்ந்து இறப்பைக்கு அனுப்பினால் தான் பசியும்> தாகமும் அடங்கியதாக உணர்வுகள் ஏற்படும் என்ற ஞாயமான சிந்தனை எழலாம்.

சூழ்நிலைக்கொப்ப மாற்றங்கள் செய்தே ஆகவேண்டும் உதாரணத்திற்கு உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் ஒருவருக்கு வாய் திறந்து உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டால் வாய் திறந்து அவரால் உணவு உண்ண முடியாது என்பதற்காக அவரை அப்படியே வைத்து சிகிச்சை அளிப்பதில்லை அவர் பூரண குணம் அடையும் வரை டியூப் மூலம் மூக்கின் வழியாக திறவ உணவுகள் நேரடியாக இறப்பைக்கு அனுப்பப்படுகிறது அவ்வாறு அனுப்பப் பட்டால் தான் அவரால் முழு சிகச்சைப் பெற முடியும் மருத்துவர் அளிக்கின்ற ஹெவிடோஸ் களுக்கு வயிறு காலியாக இருந்தால் சிகிச்சைக்காக அளிக்கப்படுகின்ற மருந்துகளே நோயாளிகளுக்கு மரணமாக மாறிவிடும்.

டியூப் மூலம் மூக்கின் வழியாக உணவேற்ற முடியும் என்று மனிதனே சிந்தித்தால் ?
மனிதனைப் படைத்த இறைவன் எப்படி எல்லாம் சிந்தித்திருப்பான் ?

இறைவன் ஓட்டகத்தை வறண்ட பூமிக்கு ஒரு வாகனமாக வடிவமைத்தக் காரணத்தால் அது பயணிக்கும் வழிகளில் உணவும், நீரும் எளிதில் கிடைக்காது என்பதால் அதனுடைய உடலின் உட்புறத்தில் மெகா ஏற்பாடு ஒன்றை செய்து அது தாமாக இயங்கிக் கொள்ளும் நிலையில் அதனுடைய அமைப்பை ஏற்படுத்தினான்.

இறைவனின் இந்த மெகா செட்டப் காரணத்தால் ஒட்டகம் உணவு மட்டும் கிடைத்தால்> நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ> நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் பயணிக்கும்.

இன்று மனிதன் கண்டுப் பிடிக்கும் எலக்ட்ராணிக் உபகரணங்களில் எந்தெந்த இடங்களில் எந்தெந்த ஒயர்களைப் பொருத்த வேண்டும், அவைகளை சீராக இயக்குவதற்கான ஸ்விட்சை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பனவற்றை துல்லியமாக கண்டுப் பிடித்து அமைக்கிறான்.

மனிதனே இப்படி என்றால் ?
அவனைப் படைத்த படைப்பாளன் எப்படி எல்லாம் சிந்தித்திருப்பான் ?

உயிரிணங்களின் உடலுக்குள் எந்தெந்த இடத்தில் எவ்வாறான உறுப்புக்களைப் பொருத்தி அந்தந்த உறுப்புகள் இயங்குவதற்கான நரம்புகளை அமைத்து எந்தெந்த நரம்புகளுக்கு எந்தெந்த உறுப்புக்கள் என்பனவற்றை இயக்குவதற்கு மூளை என்ற ஒரே ஸ்விட்சை இறைவன் அமைத்தான் சுப்ஹானல்லாஹ்.

மனித மூளை என்பது மனிதரின் மையநரம்புத் தொகுதியினுடைய மையமும், சுற்றயல் நரம்புத்தொகுதியினுடைய அடிப்படை கட்டுப்பாட்டு நிலையமுமாகும். மனிதமூளை, சிக்கல் தன்மை குறைந்ததும் பிரக்ஞை இன்றியும் நிகழும், மனிதரின் இச்சை இன்றிய செயற்பாடுகளான சுவாசம், சமிபாடு, இதயத்துடிப்பு போன்ற செயற்பாடுகளையும், பிரக்ஞையுடன் நிகழும் சிந்தனை, புரிதல், தர்க்கம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்றைய எல்லா உயிரிகளையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளை சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது. மனித மூளை - தமிழ் விக்கிபீடியா (Tamil ...
கோவேறு கழுதைகள், மாடுகள் போன்ற பாரம் சுமந்துப் பயணிக்கும் வனவிலங்குகளில் மற்ற விலங்குகளிலிருந்து மலைக்கும் முகடுக்கும் உள்ள அளவு ஒட்டகம் வித்தியாசப்படுகிறது.

வித்தியாசப்படுவதால் தான் இறைவன் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்றுக் கூறி அதை ஆய்வு செய்யக் கூறுகிறான்.

எங்கெல்லாம் வித்தியாசம் இருக்கின்றதோ அங்கெல்லாம் இறைவனின் அத்தாட்சிகள் இருப்பதைக காணலாம் என்று இறைவனேக் கூறுகிறான். 3:190. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.

உதாரணத்திற்கு ஒட்டகமும், ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றுப்போல் காட்சி அளித்தாலும் அதனுடைய உட்புற உறுப்புக்களில் வித்தியாசத்தை ஏற்படுத்தி அதனுடைய செயல்பாடுகளில் பாரிய மாற்றத்தை இறைவன் ஏற்படுத்தினான். பாரப்பதற்கு ஒன்றுப் போல் இருப்பவைகள் குணநலன்களில், நடைமுறைகளில் மாறுபடும்பொழுது தான் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பது ஊர்ஜிதமாகும். இல்லை என்றால் எல்லாம் தாமாகத் தோன்றியவைகளே, ஒன்ற மற்றொன்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் என்ற டார்வினிஸக் கொள்கையை பெரும்பாலான மக்கள் ஏற்றிருப்பார்கள்.

இன்னும் உதாரணத்திற்கு மற்றொறு சான்று கடல் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும், அதனுடைய நீரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் ஆனால் அதில் உப்பு நீர் தனியாவும், சுவையான நீர் தனியாகவும் இருக்கிறது அது இரண்டும் ஒன்று சேராதவாறு இறைவன் தடுப்பை ஏற்படுத்தி இருப்பதாக அறிவியல் அறவே வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் திண்ணைப் பள்ளியில் சென்று பாலர் பாடம் கூடப் படிக்காத முஹம்மது நபிக்கு 1400 வருடங்களுக்கு முன் இறைவன் கூறினான். அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். (25:53)

மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப்பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றான்.

இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலைஇ உப்பின்தன்மை,அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது. ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சியில் உறுதி செய்துள்ளார். http://islamworld.net/docs/it-is-truth/SeasAndOceans.html

அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் அற்புதப படைப்பாகிய ஒட்டக அதிசயத்தை இன்னும் எழுதுவோம்.

இமயம் தொலைக்காட்யில் தினமும் இரவு 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேயர்கள் இந்த பகுதியில் இன்ஷா அல்லாஹ் காணலாம்! வெளிநாட்டில் உள்ள சகோதரர்களுக்கு இமயம் தொலைக்காட்சி சரியாக தெரியாத காரணத்தினால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
http://onlinepj.com/ImayamTVPrg.asp

மறைவழி மார்க்கத்தைப் பரப்புவோம் !! மனித நேயத்தை வளர்ப்போம் !!

அறிந்து கொள்ளுங்கள் அறியாமைக் காலப்பழக்க வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன. ஓர் அரபியருக்கு, அரபியரல்லாதவரை விடவோ, ஓர் அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியரை விடவோ எந்தச்சிறப்பும் மேன்மையும் இல்லை, நீங்கள் அனைவரும் ஆதமின் (முதல் மனிதரின்) வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார் -நபிமொழி

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

Tuesday, March 10, 2009

புதிய தேசம்

இனியொரு சுதந்திரம் காண்போம்…மண்ணறையை நோக்கி மலேகான் விசாரணை!?

மராட்டிய மாநிலம் மாலேகானில்கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம்தேதி குண்டுவெடிப்பு நடந்தது.இந்தக் குண்டுப் வெடிப்பைநிகழ்த்தியது முழுக்க முழுக்கஇந்துத்துவ பயங்கரவாதஅமைப்பான இந்து ஜாக்ரன் மன்ச்தான் என்பது இந்த வழக்கைவிசாரித்து வரும் யுவுளு - (யுவெi-வுநசசழசளைவ ளுஙரயன) மூலம்தெரியவந்தது. மேலும் இந்தநாசவேலையில் ஈடுபட்டுள்ளதுதொடர்பாக பெண் சாமியார்பிரக்யாசிங், ராணுவ அதிகாரிபுரோகித், சாமியார் தயானந்த்பாண்டே, ரமேஷ் உபாத்யாயா,ராகேஷ் தவாடே, சுதாகர்சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்னிஉள்பட 11 பேரை மராட்டிய மாநிலதீவிரவாத தடுப்புப் படை கைதுசெய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மும்பை தீவிரவாததாக்குதலின் போது படுகொலைசெய்யப் பட்ட மகராஷ்ட்ராவின்தீவிரவாதத் தடுப்புப் படையின்தலைவரான ஹேமந்த் கர்கரேயின்படுகொலைக்கு பிறகு 90 நாட்களில்தீர்ந்துவிடும் என்று கர்கரேதன்னுடைய கடைசி பேட்டியில்உறுதியாக சொன்ன மாலேகான்வழக்கின் கதி என்ன வாகும்?என்ற நாட்டு மக்களின்கவலையை நிஜமாக்கும் விதத்தில்சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

மகராஷ்ட்ரா மாநில தீவிரவாதத்தடுப்புப் படையின் தற்காலிகத்தலை வராக கே.பி. ரகுவன்ஷிஎன்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குறித்தநெருடலான சர்ச்சைக்குரியதகவல்கள் வெளிவந்த வண்ணம்உள்ளன.

ஜனவரி 22, 2008 ஆம்ஆண்டு ஹேமந்த் கர்கரேதீவிரவாதத் தடுப்புப் படைதலைவராக பொறுப்பு ஏற்றார்.அதற்கு முன்புவரை இதே ரகுவன்ஷிதான் யுவுளு-ன் தலைமைப்பொறுப்பில் இருந்து வந்தார்.அப்போது அத்தனை தீவிரவாதவழக்குகளிலும் முஸ்லிம்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைமட்டுமே வளைத்துப் பிடித்துவிசாரித்தவர்தான் இந்த பாசிசசங்பரிவார் கூட்டாளி கே.பி.ரகுவன்ஷி.

மாலேகான்குண்டுவெடிப்பு வழக்கில்தொடர்புடைய முக்கியகுற்றவாளியான ராணுவத்தைச்சேர்ந்த அதிகாரி கர்னல்புரோஹித்துக்கு நெருங்கிய நண்பர்இவர் என்பதும் இப்போது தெரியவந்திதுள்ளது.

ஷிவானந்த் திவாரியின் கருத்து:-

இந்த திடுக்கிடும் தகவல்களைமேற்கொள் காட்டி ரகுவன்ஷியைதீவிர வாதத் தடுப்புப் படைத்தலைவர் பதவியை விட்டு நீக்கவேண்டும் என ஐக்கிய ஜனதாதளராஜ்ய சபா உறுப்பினர் ஷிவானந்த்திவாரி வேண்டுகோள்விடுத்திருக்கிறார்.

ரகுவன்ஷிதீவிரவாதத் தடுப்புப் படைத்தலைவராக ஹேமந்த் கர்கரேபொறுப்பேற்பதற்கு முன்னதாக பதவிவகித்து வந்தார். ஏறக்குறையமூன்று ஆண்டுகள் அந்தப் பதவியைவகித்து வந்தார். 2005 ஆம் ஆண்டுதீவிரவாதத் தடுப்புப் படைதலைமையகத்துக்கு வந்து உளவுஎடுப்பது குறித்து வகுப்புஎடுப்பதற்கு கர்னல் புரோஹிதுக்குரகுவன்ஷி அழைப்பு விடுத்த தாகவும்குறிப்பிட்ட ஷிவானத் திவாரிஇரகுவன்ஷியை உடனடியாக நீக்கவேண்டும் என கடுமையாகக்கருத்து தெரிவித்தார்.

போலீஸ் காவலுக்கு அனுமதிமறுப்பு:-

இந்த நிலையில் இந்தவழக்கில் குற்றம்சாட்டப்பட்டபிரக்யாசிங் உள்ளிட்ட 11 பேரின்காவல் முடிவடைந்ததைதொடர்ந்துஇ அவர்கள் அனைவரும்மும்பையில் உள்ள கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டனர். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் ரோகிணிசாலியன் ஆஜரானார். அவர்காலம் : 1 பிப்ரவரி 2009 பொழுது : 1அத்தனை தீவிரவாதவழக்குகளிலும் முஸ்லிம்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமேவளைத்துப் பிடித்துவிசாரித்தவர்தான் இந்தபாசிச சங்பரிவார்கூட்டாளி கே.பி.ரகுவன்ஷி.மாலேகானில் குண்டுவெடிப்பதற்குமுன் குற்றம் சாட்டப்பட்டமற்றவர்களுக்கும்இ சுதாகர்சதுர்வேதிக்கும் இடையே நடந்தஉரையாடல் அடங்கிய சி.டி.யைஅவரது வீட்டில் கைப்பற்றிஉள்ளோம். மேலும் இந்த வழக்கில்தேடப்படும் ராம்ஜி கால்சங்கராஇசதுர்வேதி வீட்டில்தான் தங்கிஇருந்துள்ளார். இதுபற்றிசதுர்வேதியிடம் மேலும் விசாரிக்கவேண்டி இருப்பதால் அவருக்குபோலீஸ் காவல் வழங்க வேண்டும்என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிஒய்.டி. ஷிண்டே, விசாரணைக்காகபோலீஸ் காவலுக்கு அனுமதிமறுத்து பிரக்யாசிங் உள்பட 11பேரையும் வரும் 20-ஆம் தேதி வரைநீதிமன்றக் காவலில் வைக்கஉத்தரவிட்டார்.மேலும் தயானந்த்பாண்டே கோர்ட்டுக்கு வெளியில்வைத்து சகோதரரின் செல்போன்மூலம் தனது மகனுடன் பேசநீதிபதி அனுமதி வழங்கினார்.

இதுவே முஸ்லிம்களாக இருந்தால்அவர்களின் நிலை என்னவாகஇருந்திருக்கும் என்பதை நாம்சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உண்மை நிலை :-

இது ஏதோ மலேகானில் மட்டும்நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் -திருநெல்வேலி மாவட்டம் -தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்திற்கு அருகிலும்இதுபோன்ற குண்டு வெடிப்பைச்செய்ததும் ஆர்.எஸ்.எஸ்.மதவாதிகள்தான் என்று கண்டுப்பிடிக்கப்பட்டதும். இந்த சம்பவத்தில்இந்து முன்னனியை சேர்ந்த ரவி,கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயணசர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள்கைது செய்யப்பட்டது நாம்அனைவரும் அறிந்ததே. ஆனால்,குண்டுகள் வெடித்தவுடன் அப்போதுஇதன் பின்னணியில் பாகிஸ்தானும்,இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புளுஐஆஐ-யும் இருப்பதாகச்சொல்லப்பட்டு, இஸ்லாமியத்தலைவர்கள் பலரும் ‘இந்தியஇஸ்லாமியர்களுக்கிடையே குழப்பம்விளைவிக்கும் இது போன்றநடவடிக்கைகளை பாகிஸ்தான்கைவிட வேண்டும்’ என்கிற ரீதியில்கண்டனம் தெரிவித்து ஒற்றுமையைவலியுறுத்தி அறிக்கைகள் விட்டதும்நினைவை விட்டு மாறாதவை.

தீவிரவாத எதிர்ப்பு படைக்கு புதியதலைவர் நியமிக்கப்பட்டதோடு விசாரணைக்கு அனைத்துஉதவிகளையும் நல்கி வந்தமஹாராஷ்டிர துணை முதல்வர்சு.சு. பாட்டிலும் தன்னுடையபதவியை ராஜினாமா செய்துள்ளார்.எனவே மாலேகான் விசாரணைஎன்ன ஆகும் என்று யுவுளு-ல்பணிபுரிபவர்களே சந்தேகம்எழுப்பியுள்ளனர்.

ஹேமந்த்கர்கரேயின் முயற்சிகள் எங்கேவீணாகி விடுமோ என்ற அச்சம்தற்கோது அனைவரையும்ஆட்கொண்டுள்ளது.‘தண்டிக்கப்படாத கிரிமினல்குற்றங்கள் மேலும் கிரிமினல்களைஉருவாக்கும்’ என்கிற குஷ்வந்த்சிங்கின் வாதத்திற்கு இன்னோர்உதாரணம். 1992-ல் தண்டிக்கப்படவேண்டியவர்கள் சரிவரதண்டிக்கப்பட்டிருந்தால் அதன்பிறகான பல தேசிய இழப்புகள்தவிர்க்கப்பட்டிருக்கும். இந்தஉண்மையை நாடும் நாட்டுமக்களும் அறியும் வரை நம்முடையலட்சியப் பயணங்கள் தொடரட்டும்.-

Monday, March 9, 2009

கியாமத் நாள் எப்படி சாத்தியமாகும்?

'அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்'. (அல்குர்ஆன் 73:4-5)

அவர்கள் எதைப்பற்றி வினா எழுப்புகின்றனர்? அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனரோ அந்த மகத்தான செய்தியைப் பற்றியா (வினா எழுப்புகின்றனர்?) அவ்வாறன்று! அவர்கள் இனிமேல் அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.

நபி (ஸல்) காலத்து மக்கள் மறுமை நாளைப்பற்றி ஐயம் கொண்டிருந்தனர். அதுபற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பி வந்தனர்.

1. அந்த நாள் எப்போது வரும்?
2. அது எப்படி சாத்தியமாகும்?
3. அப்படி என்ன தான் அந்த நாளில் நடந்து விடும்?

இவையே அவர்களின் கேள்விகள். இம்மூன்று கேள்விகளில் முதல் கேள்விக்கு இறைவன் அளித்த விடையை இதுவரை கண்டோம். 'அதை பின்னர் அறிந்து கொள்வார்கள்' என்று கூறி அது எப்போது வருமென்பதை தன்னைத் தவிர வேறெவரும் அறிய முடியாது என்று விளக்கினான்.

இரண்டாவது கேள்வி

மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகி விடுகிறான். அவனது எலும்புகள் உட்பட அனைத்தும் அழிந்து பின்னர் அவன் எப்படித் திரும்பவும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான்? இதை எங்களால் நம்ப முடியவில்லையே? மறுமை நாள் குறித்து அவர்கள் எழுப்பிய இரண்டாவது கேள்வி இது!

இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பியதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றது.

மக்கிய இந்த எலும்புகளை யாரால் உயிர்ப்பிக்க இயலும்? என்று மனிதன் கேட்கிறான். (அல்குர்ஆன் 37:78)

நாங்கள் எலும்புகளாகவும், மக்கிய பொருட்களாகவும் ஆன பின்பு புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன் 17:49, 17:98, 23:82, 37:15, 37:53, 56:47)

''நிச்சயமாக நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆனபின்னர் நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப் படுவீர்கள்' என்று அவர் உங்களை எச்சரிக்கிறாரா? நீங்கள் எச்சரிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்!! நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாம் வாழ்ந்து மடிகிறோம். மீண்டும் நாம் எழுப்பப் படப்போகிறவர் அல்லர்' (எனக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 23:35,36,37)

நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவோமா? மக்கிய எலும்புகளாக நாங்கள் ஆகிவிட்டாலுமா? என்று அவர்கள் கேட்கின்றனர் (அல்குர்ஆன் 79:10,11)

அவனது எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறானா? (அல்குர்ஆன் 75:03)

இறந்தவன் உயிர்பிக்கப்படுவதும் அவன் விசாரிக்கப்படுவதும் சாத்தியமே இல்லை என்று அவர்கள் கருதியதால் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பி வந்தனர்.

இந்த கேள்விக்கு திருக்குர்ஆனின் எனைய இடங்களில் விடையளித்திருக்கிறது! இந்த அத்தியாயத்திலும் விடையளிக்கிறது! இரண்டும் வெவ்வேறு விதமான விடைகள்!

மக்கிப்போய் ஒன்றுமில்லாமல் ஆன பின் எப்படி உயிர்ப்பிக்கப்பட முடியும்? என்பது உங்கள் கேள்வி என்றால் ஒரு காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுமில்லாமல் இருக்க வில்லையா? இன்ன பொருளாக இருந்தோம். இந்த இடத்தில் இருந்தோம். என்றெல்லாம் கூறமுடியாத நிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் இருந்ததில்லையா?

ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தான் நீங்கள் ஆரம்பமாகப் படைக்கப்பட்டீர்கள்! ஒன்றுமில்லாமல் இருந்தால் கூட படைக்கப்பட முடியும் என்பதை இது உணர்த்த வில்லையா? ஒன்றுமில்லாத நிலையிலிருந்து முதன் முதலில் படைப்பது ஆச்சரியமானதா? ஒரு முறை படைத்து பின்னர் அழித்து அதையே மறுபடியும் படைப்பது ஆச்சரியமானதா? என்றெல்லாம் பொட்டில் அறைந்தாற்போல் ஏனைய இடங்களில் திருக்குர்ஆன் இந்த கேள்விக்கு விடையளித்தது.

இந்த அத்தியாயத்தில் மனிதனின் சிந்தனையை தூண்டி நம்ப முடியாத அற்புதங்களை நினைவூட்டி மனிதன் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என பதிலளிக்கப்படுகிறது!

நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:06)

மலைகளை முளைகளாக நாம் ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:07)

மேலும் உங்களை ஜோடி ஜோடியாக நாம் படைக்க வில்லையா? (அல்குர்ஆன் 78:08)

மேலும் உங்களின் தூக்கத்தை இளைப்பாறுதலாக நாம் ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:09)

இன்னும் இரவை உங்களுக்கு ஆடையாக நாம் ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:10)

மேலும் பகலை வாழ்க்கை வசதிகளைத் தேட ஏற்றதாக ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:11)
உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களை நாம் அமைக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:12)


ஒளி வீசும் விளக்கையும் நாம் ஏற்படுத்தவில்லையா? (அல்குர்ஆன் 78:13)

மேலும் கார்மேகங்களிலிருந்து மழையை நாம் இறக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:14)

அதன் மூலம் தானியங்களையும், தாவரங்களையும் அடர்ந்த சோலைகளையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 78:15,16)

அவர்களின் கேள்விக்கு இந்த கேள்விகளையே இறைவன் பதிலாகத் தருகிறான்.

மக்கி மண்ணோடு மண்ணாக கலந்து விட்டவர்களை உயிருள்ள மனிதனாகப் படைப்பது உங்களால் முடியாது தான், உங்களில் மிகவும் பலசாலிகளாலும் முடியாதுதான். வரம்புக்குட்பட்ட ஆற்றலுள்ள மனித சமுதாயம் முழுவதும் முயன்றால் கூட அது முடியாதுதான்.

உங்களை விட பன்மடங்கு பெரியதான இநதப் பூமியை படைத்து அதை உருண்டை வடிவமாக்கி, அந்தரத்தில் மிதக்க விட்டு, அதைப் படுவேகமாக சுழலவிட்டு அதைவிடவும் வேகமாக அது சூரியனைச் சுற்றி வருமாறு அமைத்து, அந்தச் சுழற்சியையும், சுற்றுதலையும் நீங்கள் உணரமுடியாத வகையில் - தொட்டிலில் ஆடும் குழந்தை அந்த ஆட்டத்தை உணராதிருப்பது போன்று - அமைந்திருக்கின்ற சர்வ சக்தனுக்கு உங்களைத் திரும்பப் படைப்பது இயலாத ஒன்றாகி விடுமா? இதைச் செய்யப் போகிறவன் யார்? அவனது வல்லமை எத்தகையது என்பதை நீங்கள் அறிந்தால் இவ்வாறு ஆட்சேபனை எழுப்புவீர்களா?

நீங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அதே பூமியின் சில பகுதிகளை மிருதுவாகவும் சில பகுதிகளை அடர்த்தியாகவும் சில பகுதிகளை மண்ணாகவும் மற்றும் சில பகுதிகளை தண்ணீராகவும் படைத்து அதை சமன் செய்வதற்காக மலைகளையும் ஆங்காங்கே முளைக்கச் செய்த இறைவனுக்கு இது சாத்தியமாகாது என்கிறீர்களா?

நீங்கள் பல்கிப் பெருகுவதற்காக உங்களை ஆண்-பெண் என ஜோடிகளாகப் படைத்து அவ்விருவரும் ஒருவரை ஒருவர் ஈர்க்கக்கூடிய நிலையை ஏற்படுத்தி, அந்த ஈர்ப்பினால் இருவரையும் இணையச் செய்து, அந்த இணைப்பில் வார்த்தையில் வடிக்க இயலாத இன்பத்தை வைத்து, கண்ணுக்குத் தெரியாத சிறுதுளியை ஒருவரிடமிருந்து மற்றவருக்குச் செலுத்தி உங்களை படைத்த கடவுளுக்கு இது இயலாது என்று கூறுகிறீர்களா?

எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்று கருதும் எண்ணத்தைக் கொடுத்து, அந்த எண்ணத்தினால் சுறுசுறுப்பாக மனிதனை இயங்க வைத்து, அந்த இயக்கத்திற்கு ஏற்றவாறு பகல் பொழுதைப் படைத்து, அந்தச் சுறுசுறுப்பு வரம்பு மீறிப்போய் ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து மனநோய்க்கு ஆளாகாமலும், உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமலும் இருப்பதற்காக இரவை ஏற்படுத்தி அந்த இரவில் ஓய்வைத் தேடக் கூடிய உணர்வையும் ஏற்படுத்திய அந்த நுண்ணறிவாளனுக்குக் கூட இந்த ஆற்றல் இருக்காது என்கிறீர்களா?

மனிதன் எட்டிப்பார்க்க இயலாத உயரத்தில் பலமான வானங்களை மிகவும் பிரம்மாண்டமான கூரைகளை ஏற்படுத்தி அதனால் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்திய ஆற்றலுடையவனுக்குக் கூட இது சாத்தியமற்றது என்கிறீர்களா?

உங்களுக்கு வெளிச்சத்தைத் தருவதற்காக சூரியனைப் படைத்து, மனிதனும், தாவரங்களும் வாழவும், வளரவும் வழி ஏற்படுத்தி மனிதன் பயன்படுத்தும் கழிவு நீரை உறிஞ்சி சுத்தமாக்கி நீராவியாக உயரே கொண்டு சென்று தூய நீராக மீண்டும் பூமிக்குத் திருப்பி அனுப்பி அதன் மூலம் பயிர்களை வளரச் செய்த வல்லமை மிக்கவனுக்கு இது இயலாத காரியமா?

வரண்டு செத்து விட்ட பூமிக்கு உயிர் கொடுப்பதும் இங்கிருந்த தண்ணீரை இல்லாமலாக்கி மறுபடியும் வரச் செய்வதும் மனிதன் உயிர்ப்பிக்கப்படுதல் சாத்தியம் என்பதை உங்களுக்கு விளக்கவில்லையா?மேற்கண்ட வசனங்கள் மூலம் இத்தகைய கேள்விகளை எழுப்பி இது சாத்தியமான ஒன்றே என இறைவன் பிரகடனம் செய்கிறான்.

இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டால், அந்த இறைவன் எல்லாவிதமான பலவீனங்களிலிருந்தும் தூயவன் என்பதையும் அறிந்து கொண்டால், அவனது அதிகாரத்திற்கும், ஆற்றலுக்கும் எந்த எல்லையும் கிடையாது என்பதை விளங்கிக் கொண்டால், தனது வல்லமையை உலகறியச் செய்யும் வகையில் அவன் படைத்து வைத்திருக்கின்ற அதியசயங்களைப் பற்றி சிந்தித்தால் 'எப்படி உயிர்ப்பிக்க முடியும்' என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள். எப்படி என்பதைச் சிந்திப்பதை விட இதைச் செய்யக் கூடியவன் எத்தகையவன் என்பதை சிந்தியுங்கள்!

அவ்வாறு சிந்தித்தால் மனிதன் மண்ணோடு மண்ணாக மக்கி ஒன்றுமற்றுப் போனாலும் அந்த வல்லவனால் மீண்டும் அவனை உருவாக்க முடியும் என்பதை ஐயமற உணர்வீர்கள்!

மேற்கண்ட வசனங்கள் மூலம் இதைத்தான் அவர்களின் இரண்டாவது கேள்விக்குரிய விடையாக இறைவன் தருகிறான்.

Tuesday, April 22, 2008

உலகைச்சுற்றி . . . அமெரிக்கப் படைக்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு

அமெரிக்கக் கப்பற்படையினரின் (ருளு ஆயசiநே) பாதுகாப்பு என்ற போர்வையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் அருவருக் கத்தக்கவை. ஜப்பான், தென்கொரியா, பிலிப் பைன்ஸ் என எந்த நாடுகளுக்குச் சென்றாலும் அங்கெல்லாம் அந்த படையினரை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடை பெறுகின்றன.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை களில் அமெரிக்க வீரர்கள் ஈடுபடுவது வெட்ககரமானது. குற்றம் புரிபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கூட அந்த நாடு களுக்கு உரிமையில்லை என்பது அதை விட கொடுமை யானது.

குற்றவாளிகளை விசாரித்து தண்டனை வழங்கிட அமெரிக்க நீதிமன்றங்களுக்கு மட்டுமே உரிமை உண்டாம். அமெரிக்கப் படைகளை அனுப்ப இது முன் நிபந்தனையாக வும் போடப்படுகிறது.

1995ம் ஆண்டில் ஜப்பான் நாட்டில் 12 வயது பெண்ணை அமெரிக்க படைகள் கூட்டாக பாலியல் பலாத்காரத்திற்கு உள் ளாக்கியது. அதற்கு எதிராக கண்டனக் குரல்கள் உலகெங்கும் எழுந்தன. ஆனால் அமெரிக்கா எவ்வித நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை.

இவ் வருடத்தில் பிப்ரவரி மாதத்தில் ஒக்கி னாவோ மாநிலத்தில் 14 வயது பெண் அமெரிக்க கப்பல் படை யினரால் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி யளிக்கக் கூடியது.

ஜப்பானிய காவல்துறை அந்தக் கயவனை கைது செய்துள்ளது.ஜப்பான் - அமெரிக்க ராணுவ ஒத்து ழைப்பு சமீப காலமாக விரிவடைந்து வருவ தால் ஜப்பானிய மண்ணில் அமெரிக்க படை யினரின் பாலியல் அத்துமீறல்களும், அராஜ கங்களும் அதிகரிக்கவே செய்யும்.

அவர்கள் முகாமிட்டுள்ள பகுதிகளில் மக்கள் நிரந்தர அச்சத்திலும், கவலையுடனும் தான் வாழ வேண்டியுள்ளது.

இதனை மனதில் கொண்டுதான் ஜப்பான் நாட்டு இடது சாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பிற ஜனநாயக சக்திகள் அமெரிக்கப் படைகளை ஜப்பானிய மண்ணை விட்டே நிரந்தர மாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.

ஒக்கினாவோ சம்பவத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜப்பானின் தேசிய தொழிற் சங்கங்களின் மகா சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியா உட்பட உலகம் முழு வதும் உள்ள நாடுகளின் தொழிற் சங்கங்கள் இதற்கு ஆதரவாய் குரல் எழுப்பியுள்ளன.

Thanks : தீக்கதிர்

Wednesday, April 9, 2008

பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?

காஃபிர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதே, இஸ்லாத்தை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று வசைபாடுகிறதே, முஸ்லிமல்லாத மக்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் கட்டளையிடுகிறதே?

மேற்கூறியவை இஸ்லாத்தின் மீது பரவலாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை சில விஷமிகள் பொதுமேடையில் பேசியும், இன்னும் சிலர் தற்போது இணையத்தளங்களின் எழுதுவதன் மூலம் முஸ்லீம்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் பகைமை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இவை, உண்மை கலப்பில்லாத குற்றச்சாட்டுக்களாகும்.முஸ்லிமல்லாதவர்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது உண்மை தான். காஃபிர்கள் என்பது ஏசுவதற்குரிய வார்த்தையன்று. அரபு மொழியில் காஃபிர்கள் என்பதற்கு மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள் என்று பொருள். இஸ்லாத்தை மறுப்பவர்கள், இஸ்லாத்தை நிராகரிப்பவர்கள் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எனக் கூறுவதில் இழிவுபடுத்துதல் ஏதுமில்லை. காஃபிர்கள் என்பதன் பொருள் தெரியாத காரணத்தினால் அது ஏதோ திட்டக்கூடிய வார்த்தை என எண்ணிக் கொள்கின்றனர்.'காஃபிர்களைக் கொல்லுங்கள்! காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள்' என்றெல்லாம் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளதே? என்ற குற்றச்சாட்டும் தவறாகப் புரிந்து கொண்டதனால் ஏற்பட்டதாகும்.

முதலில் அவர்கள் சுட்டிக் காட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.அவர்களைக் கண்ட இடத்தில் நீங்கள் வெட்டுங்கள்! உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்! குழப்பம் கொலையை விடக் கொடியதாகும்.

மஸ்ஜிதுல் ஹராம்(கஃபா வளாகம்)அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்கள் போர் செய்யாதீர்கள்! அவர்கள்(அங்கே) உங்களுடன் போர் செய்தால் நீங்களும் அவர்களுடன் போர் செய்யுங்கள்! (அல்குர்ஆன் 2:191)

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்.இவ்வசனத்தில் 'அவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா?

இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களுடன் போருக்கு வருபர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறி விடாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.ஒரு ஆட்சிநடைபெரும் நாட்டில் இன்னொரு இன்னொரு நாட்டவர் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொடுக்குமா?போர் என வந்து விட்டால் எல்லா விதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன் 'அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்' எனக் கூறி போர்க்களத்திலும் புதுநெறியை இஸ்லாம் புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

அல்குர்ஆன் 4:89, 4:90, வசனங்களில் போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் எதிரிகளை வெட்டுங்கள் எனக் கூறப்படுகிறது.அந்தச் சமயத்தில் கூட நீங்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் உடன்படிக்கை செய்திருந்தால் அவ்வாறு உடன்படிக்கை செய்த மக்களுடன் எதிரிகள் சேர்ந்து விட்டால் அவர்களைக் கொல்லாதீர்கள் எனவும் அவ்வசனங்கள் கூறுகின்றன.

முஸ்லிமல்லாத எத்தனையோ சமுதாயத்தவர்களுடன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்துள்ளனர்.போர் செய்ய வந்த எதிரிகளுக்கு உடன்படிக்கை செய்தவர்கள் அடைக்கலம் கொடுத்தால் அவர்களை விட்டு விடுமாறும் இஸ்லாம் கூறுகிறது.

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நேரத்தில் எந்த ஆட்சியாளரும் செய்வதை விட பெருந்தன்மையுடன் நடக்கக் கூறும் இவ்வசனங்களைத் தான் சிலர் தங்களின் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் போது 'எதிர்த்து வருவோரை சுட்டுத் தள்ளுங்கள்' என்று இந்தியப் பிரதமர் ஆணையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த உத்தரவுப்படி பாகிஸ்தானிய முஸ்லிம் வீரர்கள் சுட்டுத் தள்ளப்பட்டால் இந்தியா முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது என யாரும் கூறமாட்டார்கள். சுடப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் சுடப்படவில்லை. போருக்கு வந்த எதிரிகள் என்ற காரணத்திற்காகத்தான் இவர்கள் சுடப்படுகின்றனர்.ஆனால் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் இவ்வாறு புரிந்து கொள்ள மறுப்பது தான் விசித்திரமாக உள்ளது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாம் மதீனாவிலும், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்பட வில்லை.இஸ்லாம் எவ்வளவு சகிப்புத் தன்மையுடைய மார்க்கம் என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் தவறான எண்ணம் கொண்டவர்கள் முன் வைப்பது பொருத்தமாக இருக்கும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா நகர் சென்றதும் இறைவனை வணங்குவதற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப்பள்ளி வாசலில் நபிகள் நாயக்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அமர்ந்திருந்த போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வருகிறார். பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட நபித்தோழர்கள் ஆத்திரமுற்று அவரைத் தாக்கத் தயாரானார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை விட்டு விடுங்கள்' எனக் கூறினார்கள்.அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்தனர். அவரிடம் மென்மையாக 'இது அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம். இங்கே அசுத்தம் செய்யக் கூடாது' என்று கூறி அனுப்பினார்கள்.

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரைக் தண்டிக்காமல் அவர்கள் விட்டு விட்டது சாதாரணமான ஒரு செயலாக யாருக்கும் தோன்றலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதைக் கண்டு, அவர் கழித்து முடிக்கும் வரைக் காத்திருந்து மென்மையாக அறிவுரை கூறியதைச் சாதாரணமாகக் கருதமுடியாது. இத்தகைய சகிப்புத்தன்மையை எந்த மதவாதியிடமும் காணமுடியாது.

இஸ்லாம் ஒரு கடவுளைத்தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடிய கற்சிலைகளுக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்துகிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக்கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு ஏசினால் அறியாமை காரணமாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

தான தர்மங்கள் செய்வதில், உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப்பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளை பிறப்பிக்கிறது.

மார்க்க விஷத்தில் உங்களுடன் எதிர்த்துப் போர் புரியாதவர்களுக்கும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. (அல்குர்ஆன் 60:8)

விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் நீதிக்குச் சாட்சிகளாகவும் ஆகி விடுங்கள்! ஒரு சாரார் மீது(உங்களுக்குள்ள) வெறுப்பு(அவர்களுக்கு) நீதி செலுத்தாதிருக்கும்படி உங்களைத் தூண்டக் கூடாது. நீங்கள்(அனைவரிடமும்) நீதியாக நடந்து கொள்ளுங்கள்! அதுவே இறையச்சத்துக்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 5:8)

இத்தகைய மார்க்கத்தைத் தான் வன்முறை மார்க்கம் எனத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.நியாய உணர்வுடையோர் இதை உணர்வார்கள்.

Thanks : ஏகத்துவம்

Sunday, March 30, 2008

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

""உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்'', என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது.

குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி;

தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி;

யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

"எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி' என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது.

"தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்' என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் "இதுவே நியாயம்' என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். "வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்' என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், "அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை' என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை "வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்' அவர்கள் கொக்கரிக்கிறார்கள்.

அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு "கோணலான கல்வி' தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது."திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி'யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை.

ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. "மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை' என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், "தர்மம்' என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும்.

சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் "தான் உயர்ந்தவன்' எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு "தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்' என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும்.

இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது.

இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி.

வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், "பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு' என்பதற்குப் பதிலாக, "யுத்த தர்மம்' என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது.

குஜராத்தில் நடந்தது யுத்தமா?"எதிரிகள் மனிதர்களேயல்ல' என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. "தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்', என்பதை மறந்து, "தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள்.

இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் "ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே' என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் "கொலைவெறி'யாகவும் மாறிவிட்டது.

போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான்.எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு "தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி' எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும்.

இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும்.

போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் "கூட்டத்துக்குத் தலைவன்' கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது "ராஜநீதி' என்றும் கூட ஏற்கப்படும்.

இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது?வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; "ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே' எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான "குயுக்தி'. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். "தன்னலக் குறிக்கோள்' மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், "வெறியாடும் வாய்ப்பி'லேயே விடுதலையின் திருப்தியை அடையும்.

ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.தனி மனிதனுக்கு "தன் வீடு, தன் இடம்' எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் "தன் இடம்' என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும்.இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, "யுத்தம்' எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் "கொல்லப்படுமுன் கொல்' எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும்.

குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, "கூட்டம்' ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.கோழைகள் பயந்தவர்கள். "தண்டனையைத் தவிர்ப்பதே!' அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.

குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் "வீரர்களின் சேனை'யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் "போர்' என்றும், அரசு பலத்தை "வீரமெ'ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் "தொற்று நோய்' போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.·

ருத்ரன், மனநல மருத்துவர்.

நன்றி : தமிழரங்கம்