தமிழகத்தின் முந்தைய ஜெயலலிதா அரசு, மத மாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. நாடா ளுமன்றத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து அந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது.
தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ராஜஸ்தான் மாநில பாஜக அரசு ‘மதச் சுதந்திர சட்ட மசோதா -2008’ என்ற பெயரில் மதமாற்ற தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர முயல்கிறது.
ஏற்கெனவே இத்தகைய ஒரு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி அப்போது மாநில ஆளுநராக இருந்த பிரதிபா பாட்டீலின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. அவர் அந்த சட்டத்தை திருப்பி அனுப்பிவிட்டார்.
ஆனால், அதே சட்டத்தை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். அவர் அப்போதைய குடி யரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பார் வைக்கு அனுப்பினார். அவர் கடைசி வரை இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில், கொடூரமான விதிகளுடன் கூடிய இந்தச் சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வசுந்தரா ராஜே அரசு முயல்கிறது. மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி எந்தவொரு அறக்கட்டளை அல் லது நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. மேலும்...
யாராவது ஒருவர் மதம்மாற விரும்பினால் முப்பது நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று கூறும் இந்த சட்டம், மறு மதமாற்றத்திற்கு இது தேவையில்லை என்று கூறுகிறது.
அதாவது, ஒருவர் இந்து மதத்திலிருந்து மாற விரும்பினால் நோட்டீஸ் அளிக்க வேண்டும். ஆனால், ஏற் கெனவே மதம் மாறிய ஒருவர் மீண்டும் இந்து மதத் தில் சேர விரும்பினால், நோட்டீஸ் எதுவும் அளிக்க தேவையில்லை என்று இந்த மசோதா கூறுகிறது.
இதிலிருந்தே சிறுபான்மை மக்களை ஒடுக்கி அச்சுறுத்துவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது என்பது தெளிவு.
இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 25(1) இந்திய மக்களின் மதச்சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இந்திய குடி மகன் யாரும் தான் விரும்பும் மதத்தை பின்பற்ற வும், அதை பிரச்சாரம் செய்யவும் உரிமை உண்டு என்று கூறுகிறது. ஆனால், ஒருவர் மதப் பிரச் சாரம் செய்தாலே அதை மதமாற்றத்திற்கான பிரச் சாரமாக எடுத்துக் கொண்டு அவரை சிறையில் தள்ள ராஜஸ்தான் மாநில பாஜக அரசு முயல்கிறது.
இந்தியாவில் மதமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள், இந்து மதத்தில் உள்ள கொடூரமான ஜாதிய அடுக்குகளும், கொடுமை களும், தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட அநீதி களும்தான் மதமாற்றத்திற்கு மிக முக்கிய கார ணமாக இருந்து வந்துள்ளது என்று கூறுகின்றனர்.இந்து மதத்திற்குள் நீடித்துக் கொண்டே தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் போராடிய டாக்டர் அம்பேத்கார் கடைசியில் இந்தக் கட்டமைப் பிற்குள் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்று கூறி புத்த மதத்தில் பல்லாயிரக்கணக்கான மக்க ளோடு சென்று சேர்ந்தார்.
மத மாற்றங்களால் மட்டும் தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள் ஒழிந்துவிடுமா என்ற கேள்வி இப்போதும் நீடிக் கிறது. அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு தேவாலயத்தில் இழைக் கப்பட்ட அநீதி இதற்கு ஒரு சான்றாகும். எனினும், நீண்ட காலமாக ஜாதிய வெப்பத்திற்குள் தவிக்கும் மக்களுக்கு மதமாற்றம் என்பது ஒரு தற்காலிக நிவாரணமாக உள்ளது என்பதை மறுப்பதற் கில்லை.
தீண்டாமைக் கொடுமை முற்றாக ஒழிய வேண்டுமானால் அடித்தட்டில் உள்ள அந்த மக்களுக்கு நிலமும், ஜனநாயகப்பூர்வ அதிகார மும் சென்று சேர வேண்டும்.ஆனால், இந்து மதத்தில் உள்ள ஜாதியக் கொடு மையை ஒழிக்க எந்தவொரு முயற்சியும் எடுக்காத பாஜக பரிவாரம், இன்னும் சொல்லப்போனால், சாஸ்திரம் என்ற பெயரில் இதை நியாயப்படுத்துகிற இந்தக் கூட்டம் இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க முயலும் மக்களை கட்டிப்போடவே மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வருகிறது.
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை மதரீதியாக, இனரீதியாக, பிராந்திய ரீதியாக பிரித்துக் கூறுபோட மதவெறிக் கூட்டம் தயங்குவதில்லை. மும் பையில் ராஜ்தாக்கரே, பிற மாநில மக்களுக் கெதிராக விஷம் கக்குகிறார். கர்நாடகா மாநில பாஜக தலைவர் எடியூரப்பா ஒகேனக்கலுக்கு ஓடி வந்து ஆட்டம் போடுகிறார். இப்போது ராஜஸ்தான் மாநில பாஜக அரசு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து மீண்டும் அதிகாரத்தைப் பிடிக்க முயல்கிறது.அரசு ஏற்றுக் கொண்டபடி தண்ணீர் வழங்கக் கேட்டு போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்றது வசுந்தராராஜே ஆட்சி. இந்த அரசின் மீது ராஜஸ் தான் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதை திசை திருப்புவதற்காகவே மதவெறியை தூண்டும் முயற்சியில் அந்த அரசு ஈடுபடுகிறது.ஜனாதிபதியின் பரிசீலனையில் உள்ள ஒரு மசோதாவை வேறுவடிவில் நிறைவேற்றுவது என்பது ஜனநாயக மரபுகளுக்கே எதிரானது.
ஜன நாயகத்தை துளியும் மதிக்காத இந்த மதவெறிக் கூட்டத்திடம் அந்தப் பண்பை எதிர்பார்க்க முடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment